சென்னை:

தென் மேற்கு பருவக்காற்றால் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதே நேரம், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவக்காற்றால் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதால்,பலத்த காற்று வீசலாம் என்பதால், அடுத்த 4 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.