வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்

சென்னை

ங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இண்டிய வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தின் தென்கிழக்கே வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாறிஉள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளது.

இந்த புயல் தமிழக தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கக் கூடும். இந்த புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.