காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை புதுச்சேரி இடையே இன்று கரையை கடக்கும்! வெதர்மேன் தகவல்

சென்னை:

ங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  சென்னை – புதுச்சேரி இடையே இன்று கரையைக் கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி  உள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டுள்ளவர்,  சென்னை மட்டுமல்லாமல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மழைக்கான நாள் என்றும், சென்னையில் மழையுடன் அவ்வப்போது காற்றும் வீசும் என்றும் கூறி உள்ளார்.

தற்போது  சென்னைக்கு மிக அருகே ஒரு கருத்த மேகம் தயாராகி வருவதாகவும், அது சென்னை யில் கனமழை கொடுக்கும் என்றும்…   மழையை ரசியுங்கள். கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை புதுச்சேரிக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த வட தமிழகப் பகுதிகளும் மழையைப் பெறும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும். தெற்கு சென்னையும், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு அதி கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும்,  ஒருவேளை கடலூரில் மழைக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  சென்னையில் இருந்து புதுச்சேரி வரையிலான பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளயார்.

You may have missed