சென்னை:

ரசுமுறை பயணமாக வரும் 8ந்தேதி தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா செல்கிறார். 10 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா உள்பட சில நாட்களுக்கு 13 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சென்று வந்தார். அப்போது அவருடன் பல அமைச்சர் களும் வெளிநாடுகளுக்கு சென்று வந்தனர். அப்போது, ஓபிஎஸ்சும் வெளிநாடு செல்ல திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. கட்டுமான தொழில் குறித்து ஆய்வு செய்வதற்காக  சிங்கப்பூர். சீனா  இந்தோனேசியா செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது புதிய  தகவல் வெளியாகி உள்ளது. வரும் 8 ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்வதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் ஓபிஎஸ்,  அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகர்களுக்கு செல்கிறார். அங்கு நகர்ப்புற மேம்பாடு சம்பந்தமான பணிகளை பார்வையிடுகிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் .அங்கு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் அவர் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 18 இல் சென்னை திரும்புகிறார்.