துணைமுதல்வரா…துணைவியரா ? :  டங் ஸ்லிப் ஆன எடப்பாடி பழனிச்சாமி

வரலாற்றில் இல்லாத அளவுக்கு, தற்போதைய தமிழக ஆளுங்கட்சியினருக்குத்தான் பேசும்போது “டங்” ஸ்லிப் ஆகிறது.

இந்திராகாந்தியை, முதல்வராக இருந்தவர் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

“ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் தினகரனிடம் இருக்கிறது” என்று பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிறகு, “டங் ஸ்லிப் ஆகிவிட்டது. ஜெயலலிதா பெயரை வைத்து சசிகலா கும்பல் கொள்ளையடித்த பணம் தினகரனிடம் இருக்கிறது” என்றார்.

 

ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ்.

 

இந்த டங் ஸ்லிப் பேச்சுக்களில் நம்பர் ஒன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். “கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார்” என்று அவர் கூறியதற்கு இணையாக வேறு யாருக்கும் டங் ஸ்லிப் ஆகவில்லை.

இந்த நிலையில் தனது அடுத்த சிக்ஸரை (!) அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று சட்டமன்றத்தில் பேசிய அவர், “எதிர்கட்சி தலைவர் கேள்விக்கு எனது துணைவியார் விளக்கம் அளித்தார்” என்றார். பிறகு சுதாரித்துக்கொண்டு, “..துணைமுதலமைச்சர் விளக்கம் அளித்தார்” என்றார்.

இவரது பேச்சைக்கேட்ட அ.தி.மு.க. அல்லாத எம்.எல்.ஏ.க்கள் சிரித்தனர்.