கருணாநிதியுடன் ஓபிஎஸ், அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவரது உடல் நிலை நலிந்துள்ளது என்று காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதியை சந்தித்தனர்.

முன்னதாக ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களை தி.மு.க. மூத்த தலைவர் துரைமுருகன், ஆர.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர். சந்திப்புக்கு பின் ஜெயக்குமார் கூறுகையில்,‘‘கருணாநிதி நலமாக உள்ளார். அவரை சந்தித்தது அரசியல் பண்பாடு. அவர் முழு குணமடைந்து நலம் பெறுவார்’’என்றார்.