துணை முதல்-அமைச்சருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி

விஜயவாடா,

ஆந்திர மாநில துணை முதல்வருக்கு மாநிலங்களவை உறுப்பின்ர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இது புதுவிதமான ஸ்டைல்…

தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் ராஜ்யசபா பதவி கேட்டு கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து தோல்வியை தழுவிய நிலையில்-

ஆந்திர மாநிலத்தில் 2 அமைச்சர்களுக்கு ராஜ்யசபா எம்.பி.சீட் வழங்கி ஆச்சர்யபடுத்தியுள்ளார், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

இது, அமைச்சர்களுக்கு பதவி இறக்கம் என்று மேலோட்டமாக தோன்றலாம்.

ஆனால் அப்படியான  விநோத சூழல் அங்கு ஏற்பட்டதால், அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டார், ஜெகன்.

அப்படி  என்ன சூழல்?

ஆந்திராவில் நான்கு மேல்சபை எம்.பி.பதவி காலியாகிறது.

ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதால் நான்கு இடங்களும், அந்த கட்சிக்கே கிடைக்கும்.

இந்த நிலையில் அந்த கட்சி சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர்- சுபாஷ் சந்திர போஸ். ஆந்திர துணை முதல்வராக உள்ளார்.

இன்னொருவர்- வெங்கடரமணன்.மீன்வளத்துறை அமைச்சர்.

அவர்கள் இருவருமே இப்போது எம்.எல்.சி.க்களாக உள்ளனர். ஆந்திராவில் சட்ட மேல்-சபையை  கலைக்க வகை செய்யும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் சபை காலியாகும்.மேற்சொன்ன இருவரின் எல்.எல்.சி.பதவியும் பறிபோகும்.

அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது.எனவே  அவர்களை எம்.பி.க்களாகி விட்டார், ஜெகன்.

ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்ட இரு அமைச்சர்களும், ஜெகனின் தந்தையும்,முன்னாள் முதல்வருமான ராஜசேகரரெட்டியின் தீவிர விசுவாசிகள். அவர் மரணத்துக்கு பிறகு, ஜெகன் புதுக்கட்சி ஆரம்பித்தபோது, அந்த கட்சியை வளர்க்க தூணாக இருந்தவர்கள்.

நன்றிக்கடனாக முதலில்- அமைச்சர் பதவி.

இன்று- எம்.பி. பதவி.