நீலகிரி அருகே ஓபிஎஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து…. பரபரப்பு

ஊட்டி:

ற்போது நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும், துணைமுதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வாகனம்  இன்று காலை நீலகிரி நடுவட்டம் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேனில் ஓபிஎஸ் பயணம் செய்யாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரு மான ஓ.பன்னீர் செல்வம் நீலகிரி லோக்சபா தொகுதியில் பிரச்சாரம்  இன்று தேர்தல் பிரசாரம் செய்ய இருந்தார். இதற்காக அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர்  எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, நடுவட்டம் என்ற மலைப்பகுதியில் சென்றபோது,  திருப்பத்தில் வேன்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.