சென்னை:

மிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தேனி பெரிய குளம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம். முன்னதாக அவரது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் ஜெயக்குமார் வாக்களித்தார்..

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

அதுபோல, நாம் தமிழர்கட்சி தலைவர் சீமானும் தனது வாக்கினை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில்  பதிவு செய்தார்.

விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தோடு வாக்களித்தார்..

கோவை குனியமுத்தூரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்.

கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயகுமார் வாக்களித்தார்.

மதுரையில் முன்னாள் திமுக தென்மண்டல செயலாளர் மு.க.அழகிரி குடும்பத்தினருடன் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்  என்றார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா, எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் ஆகியோர் வாக்களித்தனர்.

சென்னை அடையாறில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தயாநிதி மாறன் நந்தனத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கோவையில் பெண்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குடும்பத்துடன் வாக்களித்தார்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாக்களித்தார்

பெரம்பலூர்  தொகுதியில்  வேலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா வாக்களித்தார்..

நடிகர் சத்யராஜ் வாக்களித்தார்

நடிகர் அர்ஜுன் சென்னையில்  தனது வாக்கை பதிவு செய்தார்.

ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் தனுஷ்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் வாக்களிக்கவில்லை