அத்திவரதரை தரிசனம் செய்தார் துணைமுதல்வர் ஓபிஎஸ்

காஞ்சிபுரம்:

யன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று தரிசனம் செய்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தண்ணீரில் இருந்து எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சித்தரும்,  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தற்போது சயனக் கோலத்தில் காட்சி தந்து வருகிறார். அவர் சயன கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. நாளை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை காஞ்சிபுரம் வந்த துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் வரவேற்று, வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, அத்திவரதருக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து வழிபட்டார். அவருடன் பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன் போன்ற அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தரிசனம் செய்தனர்.

கார்ட்டூன் கேலரி