உ.பி.யில் விதிமீறி 14 உடல்களை தானம் செய்த சாமியார் ராம் ரஹீம் சிங்!!

லக்னோ:

பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் இருந்து உ.பி. மருத்துவ கல்லூரிக்கு 14 உடல்களை இறப்பு சான்றிதழ் இல்லாமல் நன்கொடையாக வழங்கிய புகார் தற்போது எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா ஆஸ்ரம சாமியார் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழ க்கில் சிக்கி 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது ஆஸ்ரமத்தில் இருந்து 14 உடல்களை உ.பி ஜிசிஆர்ஜி மருத்துவக் கல்லூரிக்கு 14 உடல்களை தானமாக வழங்கியிருப்பது மத்திய சுகாதார துறை அமைச்சக ஆவணம் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த உடல்கள் உரிய அனுமதி இல்லாமலும், இறப்பு சான்றிதழ் இல்லாமலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘‘உரிய அனுமதி இல்லாமலும், இறப்பு சான்றிதழ் இல்லாமலும் இந்த 14 உடல்களை மருத்துவக் கல்லூரி பெற்றுக் கொண்டது பெரும் சர்ச்சைக்கு உரியதாகும்’’ என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரிக்கு அங்கிகாரம் வழங்குவது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணை குழு தான் இந்த உண்மை தற்போது கண்டறிந்துள்ளது.

ஜிசிஆர்ஜி மருத்து கல்லூரி நிர்வாக உறுப்பினர் ஓங்கர் யாதவ் கூறுகையில்,‘‘ கடந்த மாதம் 16ம் தேதி இ ந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடற்கூறியல் துறையில் 14 உடல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

கடந்த ஜனவரியில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது ஒரே ஒரு உடல் தான் இருந்தது. அதனால் கண்டிப்பாக 15 உடல்கள் இருக்க வேண் டும் குழுவினர் அப்போது தெரிவித்திருந்தனர்’’ என்றார்.

இதை தொடர்ந்து மருத்துவ குழுவின் அறிக்கையின் படி இக்கல்லூரியில் 2 ஆண்டுகளுக்கு மாணவர் சேர் க்கையை அரசு நிறுத்தியுள்ளது. மேலும், அந்த 14 பேரது இறப்புக்கான காரணம் என்வென்று தெரியாத நிலை உள்ளது.

மேலும் ஓங்கர் யாதவ் கூறுகையில்,‘‘ ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் இது போன்று உடல்களை தானமாக பல கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளனர். இறந்த 14 பேரின் உடல்களும் தானமாக அளித்தறகான கு டும்பத்தினரின் பிரமான பத்திரம் எங்களிடம் உள்ளது. லக்னோ போலீசார் இதை சோதனை செய்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

இது குறித்து கேஜிஎம்யு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் துறை தலைவர் நவ்னீத் சிங் கூறுகையில், ‘‘அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரி என எந்த கல்லூரியானாலும் உடல்களுக்கு டாக்டர் அல்லது மருத்துவமனை வழங்கிய இறப்பு சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அதோடு குடும்பத்தாரின் ஒப்புதல் கடிதமும் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத உடல்களுக்கு பிரேத பரிசோதனை சான்றிதழ் அவசியம். அதே சமயம் போலீசாரின் தடையில்லா சான்று இதற்கு முக்கியம்’’ என்றார்.