கொல்கத்தா: முகநூல் நிறுவன அதிபர் மார்க் ஸூகர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரெய்ன், பாரதீய ஜனதாவிற்கு ஆதரவாக முகநூல் நிறுவனம் செயல்படுகிறது என்ற குற்றசாட்டிற்கு முகாந்திரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநிலத்தில் முகநூல் பக்கங்கள் மற்றும் கணக்குகள் அந்நிறுவனத்தால் முடக்கப்பட்டதானது, பாரதீய ஜனதாவுக்கும், அந்நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பை உறுதிபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெரெக் ஓ பிரெய்னும், முகநூல் நிறுவன அதிபரும் டெல்லியில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, இந்த சார்புநிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எதிர்க்கட்சியான நாங்கள், முகநூல் நிறுவனம் கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களில், முகநூல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பெரிய கவலையைக் கொண்டுள்ளோம்” என்றுள்ளார்.

அவர் எழுதியக் கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.