பரபரப்பாக காணப்படும் சென்னை சாலைகள்… வெறிச்சோடியது… வீடியோ…

சென்னை:

க்கள் நடமாட்டம் மற்றும் வாகன ஓட்டங்களில் பரபரப்பாக காணப்படும் சென்னை சாலைகள் இன்று மக்கள் ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, இன்று நாடு முழுவதும்  சுய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.   காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல், கொரோனா நோய் தொற்ற பரவுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் திரை அரங்குகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை. பொதுமக்களும் தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

சென்னை மற்றும் முக்கிய நகரப்பகுதிகள் உள்பட கிராமங்களிலும் மக்கள் தங்களது அன்றாட பணிகளை ஒத்தி வைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பெரும்பாக்கம் மெயின்ரோடு, மேடவாக்கம் பகுதி, எச்சிஎல் ஐடி நிறுவனம் அமைந்துள்ள இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றியும் வாகனங்கள் போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது..

அது தொடர்பான வீடியோ…