அம்பேத்கர் படத்துக்கு முன் ஆபாச முழக்கம்!: வீடியோ உண்மையா பொய்யா?

டந்த டிசம்பர் 6ம் தேதி, அம்பேத்கர் நினைவு நாளில் அவரது படத்துக்கு முன், மாற்று சாதிப் பெண்களை கட்டி அணைப்போம் என்று சில இளைஞர்கள் முழக்கமிட்டதாக ஒரு வீடியோ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்குக் காரணம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் பேச்சுதான் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, “அது போன்று யார் முழக்கமிட்டாலும் தவறுதான்” என்றார் திருமாவளவன்.

முதலில் வெளியான வீடியோ:

https://www.youtube.com/watch?v=d8O5smfa-H4&feature=youtu.be

இந்த நிலையில், “அந்த இளைஞர்கள் பிற சாதிப் பெண்கள் குறித்து இழிவாக முழக்கமிடவில்லை.  அம்பேத்கரை வாழ்த்தியே முழக்கமிட்டனர். வேறு யாரோ அதை எடிட் செய்து தவறான முறையில் பரப்பிவிட்டனர்” என்று சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு, “அந்த இளைஞர்கள் முழக்கமிட்டதின் ஒரிஜினல் காட்சி” என்ற குறிப்புடன் ஒருவீடியோவையும் பதிவிட்டு வருகிறார்கள். அதில் அம்பேத்கரை வாழ்த்தியும், ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்காக  குரல் கொடுப்பதுமாகவே  காட்சி மற்றும் ஒலி இருக்கிறது.

இரண்டாவதாக வெளியான வீடியோ:

https://www.youtube.com/watch?v=pnOtxABLoW4&feature=youtu.be

இது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் செங்கொடி, தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

செங்கொடி

அதில், “பிற சாதிப் பெண்களை இழிவாக முழக்கமிட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அப்படி முழக்கமிட்ட இளைஞனை தொடர்புகொண்டு பேசினேன்.

அந்த இளைஞன் பெயர் அன்பு. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியைச் சேரந்தவர். அவர், தான் எந்த அமைப்பையும் சேராதவர் என்பதை தெரிவித்தார். மேலும் உணர்ச்சிவசப்பட்டு அப்படி தவறாக முழக்கமிட்டுவிட்டதாக வருத்தமும் தெரிவித்தார்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நாம் செங்கொடியை தொடர்புகொண்டு பேசினோம். அவர் நம்மிடமும், “அந்த இளைஞர் அன்பு முழக்கமிட்ட வார்த்தைகள் ஏற்கத்தக்கதல்ல. அவரிடம் தொடர்புகொண்டு பேசியபோது, தனது செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்தார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. தான் எந்த அமைப்பிலும் இல்லை என்பதை அந்த இளைஞரே தெரிவித்தார்” என்றார்.

வி.சி.க. பிரமுகர் செங்கொடி   வீடியோ:

https://www.youtube.com/watch?v=4BT-zdqO-AI&feature=youtu.be

பிறகு எப்படி “இதுதான்  ஒரிஜினல் வீடியோ.. இதில் ஆபாச முழக்கங்கள் ஏதுமில்லை” என்று சிலர் பதிவிடுகிறார்கள்?

“முதல் வீடியோவில் ஆபாச முழக்கங்கள் இருப்பது உண்மை என்பது பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும். இரண்டாவதாக வெளியான வீடியோ, அதே அம்பேத்கர் படம் முன்பு அதே இளைஞர் அன்பு நாகரீகமாக முழக்கமிட்டபோது எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

தவிர அந்த இளைஞரே, தான் அப்படி  கீழ்த்தரமாக முழக்கமிட்டது தவறு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் செங்கொடியிடம் வருத்தமும் தெரிவித்திருக்கிறார். இதை செங்கொடியே சொல்லியிருக்கிறார்.  ஆனாலும் சிலர் அந்த முட்டாள் இளைஞருக்கு ஆதரவாக  சமூகவலைதளங்களில் “இதுதான் ஒரிஜினல் வீடியோ” என்று பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த இளைஞர் கீழ்த்தரமாக முழக்கமிட்டது தவறு. அவருக்கு தெரிந்தே முட்டுக்கொடுக்கும் சிலர் செய்தவது பெருந்தவறு” என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

அன்புவின் முகநூல் பக்கம்

இதற்கிடையில் குறிப்பிட்ட அந்த இளைஞர் அன்புவின் செல்போன் எண்ணுக்கு முயற்சித்தோம். அவர் தொடர்பு எல்லைக்குள் இல்லை.