ராஜமவுலி படத்திலிருந்து அலியாபட் நீக்கமா? 1 கோடி டிஸ்லைக் வாங்கி சாதனை செய்த நடிகை..

டிகர் சுஷாந்த் தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் காரணம் என்று விவாதம் உள்ளது, அதில் நடிகை அலியாபட் பெயரும் இடம் பெற்றது. அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். சமீபத்தில் அவர் நடித்துள்ள சதக்2 பட டிரெய்லர் யூ டியூபில் வெளியானது. அந்த டிரெய் லருக்கு இதுவரை யூடியூப் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு கோடி டிஸ்லைக் கிடைத்திருக்கிறது.


1 கோடி ரசிகர்கள் கோபத்தை சம்பாதித் திருக்கும் அலியாபட் இயக்குனர் ராஜ மவுலியின் ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து நீக்கப்படலாம் என்று தகவல் பரவியது. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்று தெரிகிறது.
ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் ஜோடியாக அலியாபட் நடிக்கிறார். இப்படம் வரும் ஜனவரியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. இதனால் அடுத்த ஆண்டு மத்தியில்தான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. அதற்குள் அலியாபட் மீதான கோபம் ரசிகர்கள் மத்தியில் குறைந்துவிடும் எனவே அலியாபட் படத்தில் நீடிப்பார் என் பட தரப்பு கூறுகிறது.