வெளிநாட்டு குடிபெயர்வு : அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி 150 நாடுகள் ஆதரவு

மொரோக்கோ

மெரிக்க எதிர்ப்பையும் மீறி குடிபெயர்வு ஒப்பந்தத்துக்கு ஐநா அதிகாரிகளும் 150 நாட்டின் தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

மக்களில் பலர் போர், பொருளாதார தேவை, சீதோஷ்ண மாறுதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு குடி  பெயர்ந்து வருகின்றனர்.   ஆனால் அரசியல் காரணமாக பல மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் வெளிநாட்டார் குடி பெயர்வதை தடுத்து எல்லையில்  பலத்த பாதுகாப்பை போட்டுள்ளன.

மொரோக்கோ நாட்டில் ஐநா சபையின் இரு நாள் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது.   இதில் குடிபெயர்வு ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்தபட்டது.   அப்போது உலகெங்கும் போர், பொருளார தேவை மற்றும் சீதோஷ்ணம் காரனமாக வேறு நாட்டுக்கு குடிபெயர்பவர்களை அனுமதிப்பது குறித்து பேசப்பட்டது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.   ஐநா அதிகாரிகள் சார்பில் குடிபெயரும் மக்களை பாதுகாப்புடனும் சட்டபூர்வமாகவும் குடியேற்ற வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.    ஐநா சபையின் காரியதரிசி அண்டானியோ கட்டர்ஸின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் வெலிநடப்பு செய்தன.

ஆயினும் 150 நாடுகள் இந்த விவகாரத்தில் ஐநாவின் கருத்தை ஒப்புக் கொண்டு ஒன்று சேர்ந்துள்ளனர்.     இவ்வாறு இந்த கருத்தை ஆதரித்தவர்களில் ஜெர்மன் அதிபர் ஆஞ்செலா மார்கெலும் ஒருவர்ஆவார்.   இந்த ஒப்பந்தத்தில் அவர் இன்னும் கையெழுத்திடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது

You may have missed