144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீடு கணக்குகள் அழிப்பு… தயாரிப்பாளர் சங்கம் மீது சுரேஷ் காமாட்சி வழக்கு!

சென்னை:

கலைப்புலி தாணு உள்ளிட்ட 144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீட்டு கணக்குகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அழித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் பணம் செலுத்தி காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளனர்.

ஆனால் விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் வந்த பிறகு, குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காப்பீட்டை ரத்து செய்து, அவர்கள் கணக்குகளையே அழித்துள்ளனர்.

இப்படி காப்பீட்டை இழந்த தயாரிப்பாளர்கள் பலரும் கலைப்புலி தாணு, கலைப்புலி சேகரன், கங்கை அமரன், சுரேஷ் காமாட்சி பிரபலமானவர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறுகையில், “தயாரிப்பாளர்கள் சிலரின் காப்பீட்டுக் கணக்குகளை விஷால் நிர்வாகம் அழித்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததும், அதுகுறித்து எழுத்துப் பூர்வமாக தெரிந்து கொள்ள நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு இமெயில் அனுப்பினேன். அதற்கு எனது கணக்கு அழிக்கப்பட்டு விட்டதாக பதில் வந்தது.

வரும் பிப்ரவரி வரை எனக்கு இன்சூரன்ஸ் உள்ளது. ஆனால் எதற்காக இப்போதே இந்த காப்பீட்டுக் கணக்கை அழித்தார்கள்? எங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் காப்பீட்டு பாலிசி கொடுத்தார்கள். இப்போது எங்களைக் கேட்காமலேயே அழித்துள்ளனர். கணக்கு அழிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் பலர் மூத்தவர்கள். அவர்களுக்கு உடல் நீதியான பிரச்சினை வரும்போது, பணம் செலுத்தி பெற்ற காப்பீட்டு கணக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இது திட்டமிட்ட மோசடி. தயாரிப்பாளர் சங்கம் தன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது. எனவேதான் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். வக்கீல் சரவணன் இந்த வழக்கை நடத்துகிறார்,” என்றார்.

காப்பீட்டு கணக்கை இழந்த 144 தயாரிப்பாளர்கள் பட்டியல்:

S THANU
K S SRINIVASAN
K PRABHAKARAN
K VIJAYAKUMAR
K R PRABHU
S DEVARAJ GUNASEKARAN
GANGAI AMARAN
CHANDRA PRAKASH JAIN
V C KUGANATHAN
M SENTHILKUMAR
S CHAIN RAAJ
HENNRY
G RAJAMMAL
P KANNAPPAN
S. MADHESWARI
A N SUNDARESAN
SP MUTHURAMAN
N VISHNURAM
K S SIVARAMAN
K V GUNASEKARAN
GURUJI
R K SELVAMANI
S RAJARAM
M KAJAMYDEEN
MANI RATHNAM
P M VEDIMUTHU
N R DHANAPALAN
K BALACHANDRAN
K R GANESH
S S CHAKKRAVARTHY
S NAGA ASHOK KUMAR
S.J. SURYAH
C VENKATA RAJU
CHERAN
S ABUBACKER SIDDIQ
K THIRUGNANAM
M ARUL MOORTHY
S RAMESH BABU
C SARATH BABU
M K BAVA BOWRDEEN
K. PRAKASH GUNDACHA
T RAMA RAO
V MAGESHVARAN
C THOPPAIYYA
R RADHAKRISHNAN
A CHANDRASEKARAN
PRIYA RAMAN
P PRIMUS DASS
V.G.S.NARENDRAN
S SURESH
K NAGARAJAN
D RAMESH
K. KANNAN
GHEETHA
SIRAAJ
T SENTHURAN
K E GNANAVEL RAJA
A.R.RAJARAM
SAKTHI SANGAVI
C N RAJADURAI
S MAHENDRA KUMAR JAIN
R BALASUBRAMANIAM
T D RAJHA
R S ANTHANAN
Nallamuthu
SALMARA MOHAMED SHARIEF
DON GOWTHAMAN
M MOHAMED RIYAS
K HARICHANDAR PRASAD
K S KOVAI MANI
K KESAVAN
S P RAMASAMY
R RAVINDRAN
M SASI KUMAR
RANJIT
A. SALAI RAVI SHANKAR
K NARAYANAN@CHINNI JAYANTH
K MADHU
S SUBRAMANIYAN
M NACHIAPPAN
S SANJAI RAM
V ILANGOVAN
V BHAKTA
JEANS RUBAN
A. MADHAVI MOHANAN
K.P. INDIRA GANESAN
C P SIVAKUMAR
N S MOHAN
PRASEETHA KUMARAN PPG
V. RAVINDRA
PALLAVI SRINIVAS
N RAMASAMY
RAMESH REDDY
R MALLIGA
JANAKI SIVAKUMAR
KARUNAAS
M KONERU SAI
G SEKARAN
K MANICKAVASAKAM
C H SUDHARANI
T PUNNIAMURTHY
P VADIVEL
M A ALAVUDEEN
SHANTHI RAO
D MANIVANNAN
T. TAMIL AMUTHAN
T MANNAN
MVMG APPARAO
K VAIDYALINGAM
J. ANBHAZAGAN
S. BENJAMIN
C ROMESH BABU
K SHIVAJI
S VIMALA
J T SATHISH KUMAR
N.SELVARAJ
S JAYAKUMAR
S MURUGANANTHAM
R ANNADURAI
M KESAVAN
S. MANI
I SHANMUGA PRIYA
S R PRABHU
BELSI JAYASEELAN
K.S.ATHIYAMAN
V PURUSHOTHAM
A. SRINIVASAN
VIDIYAL RAJU
L.DHANASEKARAN
K.SURESH
THIRUMALAI PARAMASIVAM
S. Shankar Prasad
S. KALAIVANI
S. VIJAYALAKSHMI
R KISHORE KUMAR
M PADMANABAN
B. DHANDAPANI
😭.SURESH
K THIRUKADAL UTHAYAM
V PRABAHARAN
S. VINOD KUMAR
JOSEBRAJ
R. SHANKAR
J. JAYASEELAN
T. BHENARAM
A. NANDAKUMAR

Leave a Reply

Your email address will not be published.