பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?

சென்னை

பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?

நெட்டிசன்: அப்துல் முத்தலீஃப் (Abdul Muthaleef) அவர்களின் முகநூல் பதிவு:

அதெல்லாம் நாசா அறிவிப்பு போல ஹம்பக்தான்.

உண்மையில் ஒரு கிலோ பிளாஸ்டிக் நமது அரிசியை விட விலை அதிகம்.

கிலோ அரிசி சுமார் 40 ரூபாய் எனில் நிறமற்ற பிளாஸ்டிக் ரூபாய் 100.

பிளாஸ்டிக்கை அரிசியாக மாற்ற செய்கூலி , சேதாரம் கணக்கிட்டால்  நட்டத்திற்கா அரிசி செய்வார்கள்?

அரிசி மட்டும் அல்ல..

முட்டை, சர்க்கரை எல்லாம் இப்படித்தான்.

சீனாவில் பொம்மைகள் செய்யும் தொழிலை யாரோ படம் பிடித்து திரித்து வெளியிட்டிருக்கலாம்.

உண்மையில் அரிசியை நெல்லிலிருந்து பெறாமல் வேறுவகை ஸ்டார்ச்சிலிருந்து (உதாரணமாக ஜவ்வரிசி) பெற்று அரிசி வடிவத்துக்கு மாற்றி சந்தைப்படுத்துகின்றர்.

அதுதான் பிளாஸ்டிக் அரிசி என அழைக்கப்படுகிறது…

அரிசியில் கார்போஹைட்ரேட் முக்கியப்பொருளெனில் இவ்வகைகளில் மாவு(ஸ்டார்ச்) மூலப்பொருள்…

இது நமது உடலுக்குத் தீங்கானதுதான் …..

பிளாஸ்டிக் அரிசி என்பது உண்மையில பிளாஸ்டிக் அரிசியல்ல…