குடிபெயர்வு: சில விளக்கங்களும், விபரங்களும்

குடிபெயர்வு – சில விளக்கங்களும், விபரங்களும்

ஒரு தனிநபர் வேலைக்காக இந்தியாவை விட்டு , வெளிநாடுகளுக்குச் சென்று
வேலை செய்வதையே தொழிலாளர் குடிபெயர்வு அல்லது புலம்பெயர்வு
என்கிறோம்.

பாஸ்போர்ட் என்றால் என்ன?

பாஸ்போர்ட் என்பது வெளிநாடு செல்பவர்களுக்கு நமது அரசாங்கத்தால் கொடுக்கக் கூடியஒரு அடையாள அட்டையாகும். இந்த பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் வெளிநாடு செல்ல முடியாது.

இந்த பாஸ்போர்ட்டை வழங்குவதற்குத் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட தலைமை  அலுவலகங்களில் இதற்கென தனி அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் பிறந்த எந்த வொரு சராசரி குடிமகனும் இந்த பாஸ்போர்ட்டை பெறத் தகுதியுடையவர்.

புதிதாக பாஸ்போர்ட்டு விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டிய
ஆவணங்கள் (அ) சான்றிதழ்கள்

1. முகவரிச் சான்று (Proof of Address):  கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்கவும்.

குடும்ப அட்டை நகல், மின்கட்டண ரசீது, வாக்காளர் அட்டை, குடிநீர் வரி ரசீது, தொலைப் பேசி கட்டண ரசீது, தற்போது கணக்கில் உள்ள வங்கி புத்தக நகல், வருமான வரிச்சான் றிதழ் அல்லது வேலை நியமன கடிதம், ஒருவேலைக் குடும்ப அட்டை நகலை உங்களின் விலாசச் சான்றாக பயன்படுத்தினால், அதனுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு
சான்று இணைக்கப்பட வேண்டும்.

2. பிறப்பு சான்றிதழ்: கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்கவும்

நகராட்சி அலுவலகத்தில் அல்லது பிறப்பு, இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட பிறப்புசான்றிதழ், இறுதியாகப் படித்த பள்ளியில் அல்லது கல்லூரியில் இருந்து பெறப்பட்ட பிறந்த தேதியுடன் கூடிய சான்றிதழ், ஒருவேளை விண்ணப்பதாரர் 26-01-1989க்குப் பிறகு
பிறந்திருந்தால், நகராட்சி அலுவலர் அல்லது பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டசான்றிதழ் மட்டுமே பிறப்புச் சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும்.

 • விண்ணப்பதாரர் அரசாங்க ஊழியராகவோ (அ) பொதுத்துறை ஊழியராகவோ இருப்பின் அவர் தனது அடையாள அட்டையை இணைக்க வேண்டும்.
 • இந்திய குடிமகனுக்கான சான்றிதழ்
 • விண்ணப்பதாரர் குடிபெயர்வு அனுமதி பெற (encr) தகுதி உடையவராக இருந்தால், அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்
 • விண்ணப்பதாரரின் புகைப்படம்

விசா (VISA)

விசா என்பது நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் தூதரக அதிகாரிகளால் உங்களுக்கு வழங்கக்கூடியது. இது பல வகைப்படும். வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் அல்லது விரும்பும் தொழிலாளி வேலை செய்வதற்கான ….. எடுக்க வேண்டும்/

விசா பெற தேவையானவை

 • இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் (Passport given by GOI)
 • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)
 • வேலைக்கு அழைத்துச் செல்பவரின் நிதி நிலைமை (Sponson’s Finance
  Statement)
 • உங்கள் கையெழுத்துடன் கூடிய விசா விண்ணப்பப் படிவம்

முறையாக வெளிநாட்டிற்கு ஆள் எடுக்கும் முகவரிடம் இருக்க வேண்டிய சான்றிதழ்கள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் எடுப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் பதிவு பெற்று அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்தச் சான்றிதழ் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்தியாவிலிருந்து வேலைக்கு ஆள் எடுப்பதற்கு, குடிபெயர்வு நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு, அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தினால் சரி பார்க்கப்பட்டு, கையெழுத் திட்ட சான்றிதழின் (Deamand letter) உண்மை நகல்

வேலைக்கு ஆள் எடுக்கும் முகவருக்கு, வேலை வழங்குபவரால் கொடுக்கப்பட்டசட்ட ரீதியான அதிகாரம் (Power of Attorney) இது அந்நாட்டில் உள்ள இந்தியதூதரகத்தின் அதிகாரிகளால் சரி பார்க்கப்பட்டு கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

வேலைக் கொடுப்பவருக்கும், வேலை செய்பவருக்கும் இடையே போடப்படும் ஒப்பந்தத் தின் மாதிரி (Specimen contract) (இதில் வேலை நேரம், சம்பளம், சம்பளம் கொடுக்கும் முறை, போனஸ், ஓவர்டைம், மருத்துவ விபத்து, ஆயுள் காப்பீடு போன்ற தகவல்கள் கிடைக்கும்)

வேலை வழங்கும் நிறுவனம் மூலமாக நடைபெறும் நேரடித் தேர்வு 

குடிபெயர்வு பாதுகாவல ரிடமிருந்து உரிமைப்பெற்ற எந்தவொரு வெளிநாட்டு முதலாளி யும் இந்திய தொழிலாளர் களை வேலைக்குத் தேர்வு செய்யலாம்

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன் முக்கியமாகக் கவனிக்க  வேண்டியவை… உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்

1. பாஸ்போர்ட் – குறைந்ததது 6 மாதத்திற்கு செல்லத்தக்கவையாக இருக்க வேண்டும்

2. விசா – வெளிநாட்டிற்கு வேலை செல்வதற்கான விசாவா (work visa) என்பதைத் தெளிவு படுத்திக்கொள்ளவும்

3. வேலை ஒப்பந்தம் – பணி ஒப்பந்தத்தில் வேலை வேலை

 • நேரம், ஊதிய விவரங்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகமோ அல்லது       கவுன்சலேட்டோ முத்திரை யிட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்
 • மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களை மற்றும் உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் கொடுத்துவிட்டு, உங்களுடன் ஒரு நகலை எடுத்துச்செல்லவும்
 • இடம்பெயரும் தொழிலாளர்கள் நல அமைப்புகள் தொழிற்சங்கங்களை  தொடர்புகொண்டு குடிபெயர்தல் பற்றிய ஆலோசனை பெறவும்.

4. வெளிநாட்டுக்குப் புறப்படும் முன் உங்களுக்கு எந்த ஒரு கடுமையான நோயும் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றபின் செய்ய வேண்டியவை

 • நீங்கள் செய்யும் வேலை பற்றிய விவரங்கள், தங்கியிருக்கும் இடம், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவற்றை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்
 • வெளிநாட்டில் எப்பொழுதும் பணியாளர் அட்டையை உடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்
 • பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்களை யாரிடமும் கொடுக்கக்கூடாது. இதை நீங்களே வைத்துக்கொள்ள உங்களுக்கு முழு உரிமை உண்டு.
 • தெளிவான விவரங்கள் மற்றும் முறையான ஆலோசனைகள் இல்லாமல் எந்த ஆவணத் திலும் கையெழுத்திடக்கூடாது

வெளிநாட்டில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே அங்குள்ள இந்திய தூதரகங்கத்தையோ அல்லது தொழிலாளர் நல அமைப்புகளை அணுகவும். உதவிக்கோரி எந்த ஒரு முகவரையும் அணுக வேண்டாம்.

பொதுநலன்கருதி வெளியிடுவோர் மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம். தமிழ்நாடு
6, இராஜிவ் பவன், 2வது பிரதான சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600028.

Phone: 91-044-24613388

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Indian National Rural labour Federation, Migration details, migration information, Passport details, VISA details, இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம், குடிபெயர்வு, பாஸ்போர்ட் என்றால் என்ன, விசா எடுப்பது எப்படி, விசா எதற்கு, விபரங்கள், விளக்கங்கள், வெளிநாட்டு வேலை
-=-