சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமும் தமிழக மீடியாக்களும் : ஒரு அலசல்

சென்னை

மிழக ஊடகங்கள் நடிகர்கள் மரணத்தில் அதிக ஆர்வம் காட்டுவது கிடையாது என்பதைக் குறித்த ஒரு செய்திக் கட்டுரை.

கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தது நினைவிருக்கலாம்.   அப்போது நாடெங்கும் அந்த மரணச் செய்தியை ஊடகங்கள் மும்முரமாக வெளியிட்டு வந்தன.    இந்த மரண நிகழ்வை வைத்து பலவிதமான ஊகங்களெழுந்தன. ஒரு தெலுங்கு டிவி சேனல் தனது செய்தியாளரைக் குளியல் தொட்டிக்குள் குதிக்க வைத்து மேலும் ஆய்வு செய்தது.

ஆனால் இந்நிலை தமிழகத்தில் செல்லுபடி ஆகவில்லை. ஸ்ரீதேவி பாலிவுட்டில் நம்பர் 1 ஆகி இந்தியாவையே கலங்க வைத்தாலும் ஆரம்பத்தில் தமிழகத்தில் தனது கலைச்சேவையை தொடங்கினார்.   ஆனாலும் தமிழகம் அவர் மரணச் செய்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனச் சொல்லலாம்.   ஸ்ரீதேவியின் மரண தினத்தன்று மட்டுமே அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிறகு தமிழகம் சிரியா தகராறு குறித்த செய்திகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

இவ்வளவுதான் தமிழகம் எனச் சொல்லலாம்.

உண்மையில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் மு கருணாநிதி ஆகியோர் மரணம் அடைந்த போது ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தைக் குறித்து செய்திகள் அளித்த ஊடகங்கள் அவர்களது இறுதிச் சடங்கு வரை அனைத்து செய்திகளையும் ஒளிபரப்பின.  ஆனால் விரைவில் அந்த மரணங்களுக்குப் பிறகு நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்து தங்கள் பார்வையை ஊடகங்கள் திருப்பி விட்டன.

தமிழகத்தில் கலையுலகத்தில் இருந்து அரசியலுக்கு வந்தோருக்குத் தனி மதிப்பு இருந்து வந்துள்ளது.திமுக நிறுவனர் அண்ணாதுரை மறைவுக்கு 1.5 கோடி பேர் வந்தது ஒரு கின்னஸ் ரிகார்ட் ஆனது.   அப்போது தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இல்லாத நேரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே தற்போது ந்ச்டிகர் சுஷந்த் சிங் ராஜ்புத் மரணம் மற்றும் அதன் பின்புல செய்திகளுக்கு தமிழக ஊடகங்கள் அதிகம் முக்கியத்துவம் அளிக்காதது ஆச்சரியம் இல்லை.   இதில் செய்தி ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மரணம் என்னும் செய்தியைத் தவிர வேறு எதுவும் அளிக்கவில்லை.  தமிழ் தினசரி ஊடகவியலர் ஒருவர் உண்மையில் பல செய்தியாளர்களுக்கு இந்த செய்தி குறித்த முழு தகவல்கள் தெரியவில்லை என்பதால் வாசகர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகங்கள் பல நேரங்களில் பல விவகாரங்களில் முழு கவனம் செலுத்துவதில்லை எனவே கூறலாம்,  குறிப்பாக மீடூ விவகாரம் நடந்த போது பல தமிழ் அச்சு ஊடகங்கள் இதைக் கருத்தில் கொள்ளவில்லை.  ஒரு சில தொலைக்காட்சி ஊடகங்கள் பாதிக்கப்பட்டோர் பேட்டியை ஒளிபரப்பின. ஆனால் அதிலும் ஆண் செய்தியாளர்கள் அதில் கூச்சல் இட்டதால் நிலைமை மோசமானது.

ஆனால் சுஷாந்த் மரணத்தில் தமிழக டிவி சேனல்கள் ரியா சக்ரவர்த்தியைக் குறித்து எவ்வித செய்தியையும் வெளியிட வில்லை எனவே சொல்ல வேண்டும். ஒரு மூத்த செய்தியாளர், “இது குறித்து எவ்வித விவாதமும் நிகழவில்லை.  இதற்குக் காரணம் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவர் தோனி வேடத்தில் நடித்தவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தமிழக மக்களுக்கு தெரியாததே ஆகும்.  மேலும் தமிழக ஊடக கலாச்சாரம் என்பது முழுவதுமாக மற்று பட்டுள்ளது என்பதும் மற்றொரு காரணம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மூத்த செய்தியாளர் இது வேண்டுமென்றே ஒதுக்கப்படவில்லை.  டில்லி ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் தமிழக ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் உள்ள வேற்றுமையே இதற்குக் காரணம் ஆகும்.   அதே வேளையில் சாவுச் செய்திகளை ஊடகங்கள் அதிகம் கவனிக்காமலும் இல்லை.  உதாரணமாக சாத்தான்குளம் மரணம்,  நீட் அனிதா மரணம் ஆகியவை அதிகம் பேசப்பட்டன.

இதற்கு முக்கிய காரணம் இது குறித்து மக்கள் நடுவில் அதிக பேச்சு இருந்ததால் தானெனவும் கூறலாம்.  இதனால் இந்த விவகாரங்கள் வாரக்கணக்கில் நீடித்தன.  மற்றொரு உதாரணமாகப் பிரதமர் விவசாய நிதியில் நடந்த முறைகேடுகள் இங்கு அதிகம் பேசப்படவில்லை. இதில் சாதாரண மனிதர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டும் இதே நிலை நீட்டித்துள்ளது. பிரபல பன்மொழி ஊடகவியலர் மணி இந்த வித்தியாசத்துக்கு காரணம் தமிழகம் மற்றும் டில்லிக்கு இடையில் உள்ள வேறுபாடே காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்து பத்திரிகையாளர் பன்னீர்செல்வம், “ஒரு சாதாரண பார்வையாளருக்குக் கலைஞர் டிவி அல்லது நியூஸ் ஜே என்ன செய்தி எனத் தெரியும்.  எனவே இதற்கு மேல் அவர்களுக்கு செய்தி தேவைப்படாது.  ஆனால் தற்போது அரசியல் மற்றும் தேர்தல் செய்திகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை அச்சு ஊடகங்களும் மற்ற செய்திகளுக்கு தருவதில்லை.  உதாரணமாக இந்து பத்திரிகையில் சுஷாந்த் விவகாரம் அதிக அளவில் பேசப்படாததற்குக் காரணமாகத் தற்கொலை செய்தி என ஒதுக்கப்பட்டதாகும்” எனக் கூறி உள்ளார்.

பொதுவாகத் தமிழ்நாடு ஊடகவியலர்களை பலரும் ஆண்டி நேஷனல் என ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் இது போன்ற நடவடிக்கைகளையே பார்வையாளர்கள் விரும்புவதாக ஊட்கவியலர்க்ள் தெரிவிக்கின்றனர்.  மேலும் இவர்களுக்குப் பல முறை தொலைப்பேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இது குறித்து ஒரு சிலர் கேள்வி எழுப்பிய போதிலும் சிறிய நகரங்களில் இந்தச் செய்திகளுக்கு வரவேற்பு இல்லாததால் இவற்றை ஒளிபரப்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்

இதனால் மற்ற சேனல்களிலிருந்து தமிழக சேனல்கள் மாறுபட்டு உள்ளதாக பொதுவாகப் புகார்கள் உள்ளன.   செய்தியாளர் மணி தமிழக ஊடகங்கள் இவ்வாறு மாறுபட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். “தற்போது ஊடகங்கள் மதச்சார்பற்றவையாக இருந்த போதிலும் வலது சாரிகளுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.   ஆனால் இங்குள்ள செய்தியாளர்கள் மற்றும் நெறியாளர்கள் ஒரு சார்புடையவர்களாக இருப்பதில்லை.  மேலும் ஊகச் செய்திகளுக்குத் தமிழகத்தில் ஓரளவுக்கு மேல் வரவேற்பு இல்லை.  மேலும் சுஷாந்த் சிங் பெயரே பல கிராம வாசிகளுக்குத் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்

சென்னை அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தைச் சேர்ந்த கவிதா கஜேந்திரன், “”ரியா சக்ரவர்த்திக்கு நடந்தது மிகவும் மோசமான விளைவுதான்.   ஆனால் தமிழக ஊடகங்கள் மனவலிமையுள்ள பெண்களை விரும்புவதில்லை.  இந்நிலையில் மீடூ செய்திகளில் பல மன வலிமையுள்ள பெண்கள் மோசமான கேள்விகளை எதிர்கொள்ள நேர்ந்தது.  அரசியலிலும் ஊடகங்களிலும் பெண்களை மோசமாகச் சித்தரிக்கும் நிலையைத் தமிழ் ஊடகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.  இதை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.