இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்

விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது.

காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவதாகச் சொல்லப்படுகின்றது.

நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஐதீகம்.

அதிலும் நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம். ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஐதீகம். எவ்வாறு நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவது. முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புறமாகச் சற்று பள்ளமாகத் தோண்டிக் கொள்ளுங்கள்.

அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் பருத்தி திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள். இவ்வாறு விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.