அறிவோம் தாவரங்களை – அகர் மரம்

அறிவோம் தாவரங்களை – அகர் மரம்

அகர் மரம்.  (Aquilaria crassna)

பாரதம் உன் தாயகம்!

2000.ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனிய மரம் நீ!

மண் வளம் மிகுந்த மலைகள், காடுகளில் வளரும் வரம் நீ! 20. மீ.வரை உயரம் வளரும் இனிய மரம் நீ!

65. ஆண்டுகள் வரை வாழும் அருமை மரம் நீ!

தென்கிழக்கு ஆசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், இந்தோனேஷியா நாடுகளில் அதிகமாக வளரும் அற்புத மரம் நீ!

16 வகைகளில் எங்கும் பரிணமிக்கும் பசுமை மரம் நீ! மூட்டுவலி, அஜீரணம், துர்நாற்றம், மார்பகப் புற்றுநோய், வீக்கம், எரிச்சல், தோல் நோய்கள், மாதவிடாய், ஒவ்வாமை நரம்புக்கோளாறு, தொற்று நோய், இருமல், கீல்வாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை  மரம் நீ!

சீனா ,வியட்நாம் நாடுகளில் ஆயுர்வேதம்,  அரோரா, மருத்துவத்தில் பயன்படும் அரிய மருந்து மரம் நீ!அகர் மெழுகுவர்த்தி,அகர்மாலை, அகர் தபத்தூள், அகர் எண்ணெய்,  தயாரிக்கப் பயன்படும் நயன்மிகு மரம் நீ! தென்னை, பாக்கு, காப்பி, தேயிலை தோட்டங்களில் வளரும் ஊடுபயிர் நீ!

500 வகையான  வாசனை திரவியங்கள், அகர்பத்திகள், சோப்புகள் தயாரிக்கப் பயன்படும்  வணிகமரமே!

உலகிலேயே விலை உயர்ந்த உன்னத மரமே!

இலை, வேர்,  பட்டை  என  எல்லாம் பயன்படும் நல்ல மரமே!

தியானம், யோகாசனம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் தெய்வ மரமே!

ஒரு கிலோ அகர் கட்டை 60 ஆயிரம் வரை விலை போகும் தங்கமரமே!

சந்தன மரத்தை விட 10. மடங்கு கூடுதல் சந்தை மதிப்புப் பெற்ற விந்தை மரமே!

ஒரு கிலோ அகர் எண்ணெய் ஒரு லட்சம் வரை விலை போகும் கற்பகமரமே!

தன் உதிர்ந்த இலைகளையே உணவாக்கிக் கொள்ளும் உன்னத  மரமே!

10 ஆண்டுகளில் பலன் தரும் பசுமை மரமே! வறட்சியைத் தாங்கி வளரும் நிழல் மரமே!

அழிந்து வரும் அரிய மரத் தாவரமே!

பிசின் கொடுக்கும் பிதாமகனே!

பச்சைத் தங்கமே!

மரங்களின் கடவுளே!

மணம் கொண்ட மரத்தின் ராஜ மரமே!

நீவிர் பல்லாண்டு காலம் வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி :பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.