இருமுடி என்றால் என்ன?  அது எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் தாங்கிச் செல்லும் இருமுடி குறித்த விளக்கம் இதோ


இருமுடிப் பையானது இரு பாகங்களாக நிரப்பப்படுகிறது.  அதில்  முன்முடி என்பது சன்னிதியில் பூஜை செய்ய பயன்படுவதாகும் அதைப் போல் பின்முடி என்பது பயண வழியில் பக்தர்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டது.

முன் முடியில் நெய்த்தேங்காய்,  ஐயப்ப நிவேதன பொருட்களான அவல், பொறி, பூஜை பொருட்களான விபூதி, குங்குமம், ஊதுபத்தி, பன்னீர் ஆகியவை இருக்கும்.

பின் முடியில் அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இருக்கும்.   நெய்த் தேங்காயில் உள்ள நெய்யால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த நெய்த் தேங்காயை எடுத்துச் செல்வதிலும் ஒரு தனி அர்த்தம் உள்ளது.  அதை இப்போது காண்போம்.

தேங்காயில் உள்ள ‘நெய்’ என்பது ஆன்மாவைக் குறிக்கிறது.  தேங்காய் என்பது மனித உடலைக் குறிக்கிறது.

கடினமான மலையேற்றத்திற்குப் பிறகு, ஒரு பக்தர் அய்யப்பன் முன்னிலையில் நிற்கும் போது  இறைவன் மீது ஊற்றப்படும் அபிஷேக நெய் தனிப்பட்ட ஆத்மாவை உலகளாவிய ஆன்மாவுடன் இணைவதைக் குறிக்கிறது

அதாவது ஜீவாத்மாவானது பரமாத்மா உடன் இணைவதைக் குறிக்கிறது.

இறுதியாக மனித உடல் தீக்கிரையாவது போல் உடலைக் குறிக்கும் வெற்று தேங்காய், ‘ஹோமகுண்டத்தில்’ நெருப்பால் நுகரப்படுகிறது.