நிலவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் ஜப்பானிய கோடீஸ்வரர்

ஜோஜோ டவுன், ஜப்பான்

நிலவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் முதல் தனியார் பயணியாக ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1969 ஆம் வருடம் ஜுலை மாதம் 21 ஆம் தேதி மனிதன் முதல் முதலாக நிலவில் இறங்கிய நாளாகும்.  நிலவில் முதலில் காலடி பதித்த மனிதராக விண்வெளி வீரர் ஆம்ஸ்டிராங்க் வரலாற்றில் இடம் பெற்றார்.    அதற்குப் பிறகும் நிலவுக்கு விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.  ஆயினும் தனியார் பலருக்கு நிலவுக்கு செல்ல ஆசை இருந்தது.

இந்த மாதம் 13 ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிலவுக்கு முதல் முதலாக ஒரு தனியார் பயணியை சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவலை வெளியிட்டது.  பிக் ஃபால்கன் ராக்கெட் மூலம் நடைபெற உள்ள இந்த பயணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறித்த விவரங்களை அப்போது ஸ்பேஸ் எக்ஸ் வெளியிடவில்லை.

இன்று அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.   அந்த பயணி ஜப்பானில் ஜோஜோ டவுனை சேர்ந்த கோடீஸ்வரரான யுசாகு மேசாவா ஆவார்,  இவர் ஜோஜோ டவுனில் உள்ள மிகப்பெரிய ஃபாஷன் மால் உரிமையாளர் ஆவர்.  இவருடைய சொத்துக்களின் மதிப்பு இந்த மாதம் சுமார் 290 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.    ஜப்பானின் கோடிஸ்வரர் பட்டியலில் இவர் 18 ஆம் இடத்தில் உள்ளார்.  சென்ற வருடம் இவர் இதே பட்டியலில் 822 ஆம் இடத்தில் இருந்துள்ளர்.

ஜோஜோ டவுனில் 1975 ஆம் ஆண்டு பிறந்த மேசாவா சிறு வயதில் இருந்தே தனது வெற்றி சரித்திரத்தை துவக்கி உள்ளார்.  தனது இசைக்குழுவை 1991 ஆம் ஆண்டு தொடங்கிய அவர் 1993 ஆம் ஆண்டு தங்களின் முதல் பதிவை வெளியிட்டார்.   அதன் பிறகு சிடி உலகில் அவர் ராஜ்யம் நடந்தது.  தற்போது அவருடைய நிறுவனப் பங்குகளுக்கு ஜப்பான் பங்குச் சந்தையில் அதிக மதிப்பு உள்ளது

மேசாவா இந்த சுற்றுப் பயணத்துக்கு அளிக்க உள்ள பணத்தைக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் தனது ராக்கெட் தொழில் நுட்பத்தை மேம்ப்டுத்த உள்ள்தாக ஹ்டகவல்கல் வந்துள்ளன..  அது மட்டுமின்றி இவருடன் ஆறு முதல் எட்டு கலைஞர்களையும் தன் செலவில் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Details about Japan billionaire who is first private passenger to moon
-=-