ஆலயதரிசனம்…  பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்….

ஆலயதரிசனம்…  பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்….

 1. “எது பொய்த்தாலும்பெரியபாளையத்தாள்அருள் பொய்க்காது” என்ற முதுமொழி இங்கு வழக்கத்தில் உள்ளது.
 2. “பாளையம்” என்றால் “படைவீடு” என்று பொருள்,பெரியபாளையம்என்றால் அம்மனின் பெரிய படைவீடு என்பதாகும்.
 3. ரேணுகாதேவிபவானி பெரியபாளையத்து அம்மனாகக் கொலு வீற்றிருக்கிறாள்.
 4. ஆரணியாற்றங்கரையில் அன்னை வீற்றிருந்து கேட்ட வரம் தரும் பவானி அம்மன் புற்றுக்குள் சுயம்புவாக தோன்றினாள்.
 5. பெரியபாளையத்துஅம்மன் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்ராயுதம், கத்தி, கபாலக்கிண்ணமும் ஏந்தி அமர்ந்த நிலையில் அருளாட்சி புரிகிறாள்.
 6. கபாலக்கிண்ணத்தில்மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு.
 7. உலகவாழ்க்கைக்குத்தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள்.
 8. ஆந்திரா வளையல் வியாபாரிகள் வளையல் மூட்டையே தலையில் சுமந்தபடி கால்நடையாக வந்துசென்னயில்விற்பார்கள் வருவார்கள்.
 9. ஆந்திராவுக்குத்திரும்பிகொண்டிருந்த வளையல் வியாபாரி, ஒருவர் பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார்.
 10. சிறிது நேரம் கழித்து கண் விழித்தார், அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து தேடினார், அவரது கண்ணில் பெரியபாம்புப்புற்று தென்பட்டது.
 11. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டைஅங்குக்கிடந்தது. ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முயன்றார், அவரால் முடியவில்லை.
 12. நீண்டநேரம் போராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை. ஆந்திராவில் உள்ள வீட்டுக்குத்திரும்பிச்சென்றுவிட்டார்.
 13. அன்று இரவு அவர் கனவில் அம்மன் தோன்றி “நான்ரேணுகாதேவி பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன்; உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா; தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு” என்று உத்தரவிட்டாள்.
 14. காலை கடப்பாரை எடுத்து வந்து பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் “ணங்” என்று ஒரு சத்தம் கேட்டது, கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது.
 15. புற்றில் இருந்துரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து போனது.
 16. புற்றுக்குள் இருந்த சுயம்பின் மேல்பகுதியில் இருந்துதான் ரத்தம் “குபு குபு” என்று வந்து கொண்டிருந்தது. உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது.
 17. அந்த இடத்தில்சுயம்புவைமூலமாகக் கொண்டு அம்பிகைக்குக் கோவில் கட்டப்பட்டது. கருவறையில் சுயம்பு அம்மன் மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
 18. தற்போதும் அந்த கவசத்தைஅகற்றிவிட்டுப்பார்த்தால் சுயம்பு அம்மன் உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவை இப்போதும் காணலாம்.
 19. முதலில் விநாயகரை வணங்கி அடுத்து பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும். பின்னர்பெரியபாளையத்துஅம்மனை வணங்கி வழிபட வேண்டும்.
 20. சுற்றுப் பிரகாரத்தில் உற்சவர், வள்ளி-தெய்வானைசமேதமுருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதி உள்ளன.
 21. ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் தொடங்கி கடைசி நாள் வரையில் திருக்கோயில் விழாக் கோலம் கொண்டுள்ளது. அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன்நவகலசபூஜை செய்யப்படுகிறது.
 22. வெள்ளிக்கிழமை கோ பூஜையும், பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவாசனைத்திரவியங்கள் மூலம் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும், கணபதி ஹோமமும் சிறப்பாகச் செய்யப்படுகிறது.
 23. ஆரணி,பெரியபாளையம்,ஊத்துக்கோட்டை பகுதியில் வேகமாகப் பரவிய வைசூரி, காலரா போன்ற நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளினாள் அன்னை.
 24. அம்மை நோய் உள்ளவர்கள் இங்கு வழங்கும் தீர்த்தம் அருந்தி வந்தால், விரைவில் குணமாகும்.
 25. அம்மனுக்குப்பிரியமான வேப்பிலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
 26. அருகில்சிறுவாபுரி, ஆண்டார் குப்பம், சுருட்டப்பள்ளி, ஸ்தலங்கள் உள்ளன.
 27. காஞ்சிமகாப்பெரியவர் இந்த ஆலயத்திற்கு வந்து தரிசித்துள்ளார். மகாப் பெரியவர் தரிசித்து பிறகு இக்கோயில் உலக அளவில் பிரசித்தி பெற்றது.
 28. பொங்கல்வைப்பது, மொட்டை அடிப்பது, காது குத்துவது, மடி பிட்சை எடுத்து பொங்கல் வைப்பது என்று பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
 29. பெரியபாளையம்பவானி அம்மன் பலருக்குக் குலதெய்வமாக இருந்து காத்து வருகிறாள்.
 1. சென்னையில் இருந்துசுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. திருவள்ளூர், பொன்னேரி வழியாக பெரியபாளையம் வந்தடையலாம்..

 

நன்றி: நெட்டிசன் அசோக் குமார் முகநூல் பதிவு