டில்லி

ரசியல் தலைவர்களில் பலர் பரஸ்பர நிதி, ரிலையன்ஸ் பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளனர்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.    இதில் சொத்துக்கள் வரிசையில் முதலீடுகள் அதிகம் காணப்படுகின்றன.    ஒரு சிலர் மட்டுமே சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.    அந்த சிறிய நிறுவனங்கள் அந்த வேட்பாளரின் நெருங்கிய உறவினர் நடத்தும் நிறுவனங்களாக உள்ளன.

பெரும்பாலானோர் பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளனர்.   அத்துடன் வங்கிகள், அரசின் சேமிப்பு பத்திரங்கள், தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்றவற்றிலும் ஒரு சிலர் முதலீடு செய்ஹ்டுள்ளனர்.  அவ்வகையில் பிரதமர் மோடி எந்த ஒரு பரஸ்பர நிதி அல்லது பெரிய நிறுவனங்களிலும் முதலீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பாஜக தெசிய தலைவர் அமித்ஷா தனது மற்றும் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களில் ஆதித்யா பிர்லா குழுமம், பஜாஜ், எல் அண்ட் டி, டாடா மற்றும் முகேஷ், அனில் ஆகிய இருவரின் ரிலையன்ஸ் நிறுவனங்களில் ரூ.17.5 கோடிக்கு மேல் முதலிட்டு செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யங் இந்தியன் உள்ளிட்ட பல பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்துள்ளர்.  அவருடைய தாய் சோனியா காந்தி யங் இந்தியன், எச் டி எஃப் ச், கோடாக் உள்ளிட்ட வங்கிகளின் பரஸ்பர நிதிகளிலும் மாருதி நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே ரூ. 1 கோடிக்கு சிறு நிறுவனங்களிலும் ரூ.6 கோடிக்கு பெரிய நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.  இதைத் தவிர பரஸ்பர நிதியிலும் முதலிடு செய்துள்ளர்.  அவர் முதலீடு செய்த பெரிய நிறுவனங்களில் அதானி, மற்றும் இரு ரிலையன்ஸ் நிறுவனம்,  டாடாவின் நிறுவனங்களுடன் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அடங்கும்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வேட்பு மனுவில் பூர்த்தி பவர் மற்றும் சுகர் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அறிவித்டுள்ளர்.   பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் பெரும்பான்மையான வேட்பாளர்களும்  இரு ரிலையன்ஸ் நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.