அறிவோம் தாவரங்களை தேன் பழ மரம்/செர்ரி பழ மரம் 

அறிவோம் தாவரங்களை தேன் பழ மரம்/செர்ரி பழ மரம்

தேன் பழ மரம்/செர்ரி பழ மரம். (Prunus avium)

தென் மெக்சிகோ உன் தாயகம்! வறண்ட நிலங்களில் வளரும் இனிய கனி மரம் நீ!

12 மீ. உயரம் வளரும் பசுமை மரம் நீ!

அமெரிக்க, பெரு,பொலிவியாநாடுகளில் காணக்கிடைக்கும் கவின் மரம் நீ!

தலை வலி, குடல் புண், மூச்சுக் கோளாறு, கீல்வாதம், புற்றுநோய், அடி வயிறு அழற்சி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி, தலைவலி, காய்ச்சல் இளநரை, தோல் சுருக்கம், பருக்கள், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

கட்டட வேலைக்குப் பயன்படும் நயன் மரமே!

கயிறு திரிக்க நார் தரும் தண்டு மரமே!

தேநீர் தயாரிக்க இலை தரும் தழைமரமே!

விதைகள் தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யும் இனிய மரமே!

60. வகையான பறவைகள் மற்றும் சிறு சிறு விலங்குகளின் சரணாலயமே!

அழகுக்காகவும்வளர்க்கப்படும் அலங்கார மரமே!

அணில், குரங்குகளின் வாழ்வாதாரமே!

ஏழை அடுப்புகளின் விறகு மரமே!

இனிப்புச் சுவை கொண்ட இனிய கனிமரமே!

குளிர்ந்த பிரதேசங்களில் அதிகம் விளையும் தேன் பழ மரமே!

ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும் அழகு செர்ரி பழமரமே!

நீவிர் சிறப்புற்று வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி :  பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.