டில்லி

மூத்த தொழிலதிபரான ரத்தன் டாடா குறித்த புதிய விவரங்கள் இதோ

டாடா நிறுவன தலைவராக இருந்து தற்போது ஓய்வு பெற உள்ள ரத்தன் டாடா ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்தார். அவருக்கு பின் பொறுப்பேற்ற சிரஸ் மிஸ்திரி மீது கடந்த 216 ஆம் வருடம் டாடா சன்ஸ் குழும இயக்குனர்கள் நம்பிக்கை இழந்தனர். அவர் பதவி நீக்கம் செய்ப்பட்டார். அதனால் ரத்தன் டாட்டா மீண்டும் தலைமை பொறுபை ஏற்று சில மாதங்களுக்கு முன்பு என் சந்திரசேகரன் அந்த பொறுப்பில் நியமிக்கபப்ட்டார்.

டாடா குழுமத்தின் கீழ் 100 நிறுவனங்களுக்கு மேல் இருந்தாலும் ஆட்டோமொபைல் இந்த குழுமத்தின் விருப்பமான வர்த்தகமாக உள்ளது. ரத்தன் டாடா சமீபத்தில் ஓட்டல் முதலீடு கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது தன்னைப் புரியாத புதிர் என சொல்வதை குறிப்பிட்டு தன்னை பற்றிய விவரங்களை அளித்தார்.

ரத்தன் டாடா தனது உரையில், “ஒரு தொழிலதிபர் மீது உங்களுக்கு எவ்வளவு ஆர்வ்ம் வ்ந்தாலும் அவர்களை சரியாக புரிந்துக் கொள்வது கடினமே. நீங்கள் உங்களுடன் பணி புரிபவரை பற்றி புரிந்துக் கொள்ளவே வெகுகாலம் ஆகும். நான் எனது நிறுவனத்தை நிர்வகிக்க ஆட்களை தேடும் போது இதை முழுமையாக அனுபவித்தேன். சரியான நிர்வாகி கிடைத்த பிறகு நான் பொறுப்பில் இருந்து விலகினேன்.

நான் அரசியலில் பங்கெடுக்கப் போவதாக இல்லை. எனது நேரம் முழுவதும் நான் ஆட்டோமொபைல் தொழில் முன்னேற்றத்தில் செலவழித்தேன். இனியும் நேரம் கிடைக்கும் போது அந்த தொழில் மேம்பாடு குறித்து உழைக்க விரும்புகிறேன். நான் எனது வாழ்நாளில் ஒரு வழிகாட்டியாக என்னை நானே எடுத்துக் கொண்டேன். தற்போது நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய நாம் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும்

நான் ஓட்டலில் தங்கி இருக்கும் போது அங்கு உள்ள சவுகரியம் மற்றும் சுத்தம் குறித்து மிகவும் கவன்ம் செலுத்துவேன். அது மட்டுமின்றி அங்குள்ள குளியலறையில் உள்ள பொருட்களை பலமுறை நான் திருடி எடுத்து வந்துள்ளேன். நான் தொலைபேசி உள்ளிட்டவைகளை திருடவில்லை.” என தெரிவித்துள்ளார்.