அறிவோம் தாவரங்களை – தூதுவளை

அறிவோம் தாவரங்களை – தூதுவளை
தூதுவளை. (Solanum trilobatum) பாரதம் உன் தாயகம்! வேலிகளில் செடிகளில் பற்றிப் படரும் கொடித் தாவரம் நீ! ஈரமான இடங்களில் வளரும் புதர்க் கொடி நீ!
ஆஸ்துமாவை அடித்துத் துரத்தும் கற்பக மூலிகை நீ!
சிங்கவல்லி, அளர்க்கம் ,தூதுளம், தூதுளை எனப் பல்வகைப் பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!
இருமல், இளைப்பு ,சளி, வாதம், பித்தம், அஜீரணம், கபம், காது மந்தம், மூக்கில் நீர் வடிதல், பல் ஈறுகளில் நீர் சுரத்தல், சூலை நீர், காச நோய், புற்று நோய், நுரையீரல் கோளாறு, விஷக்கடி, காய்ச்சல், மறதி, நீரிழிவு, கண்நோய் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்புக்கொடியே!
சூப்பு, லேகியம், துவையல், ரசம், சட்னி, கசாயம், பச்சடி, ஊறுகாய், குடிநீர், அடை, பொடி எனப் பல வகையில் பயன்படும் நல்வகைக் கொடியே! சமையலுக்கு உதவும் சத்துக் கீரை கொடியே!
கரும்பச்சை இலை உடைய கற்பகக் கொடியே!
சிவப்பு நிறக் கனி கொடுக்கும் மூலிகைக்கொடியே!
இலை, பூ, காய் ,வேர் என எல்லாம் பயன்படும் நல்ல கொடியே!
ஆண்மை சக்தியை அதிகரிக்கும் அற்புத இலைக் கொடியே!
நீண்ட ஆயுளைத் தரும் மருத்துவக் கொடியே!
ஊதாநிறப் பூப் பூக்கும் உன்னதக் கொடியே!
நீவிர் வளமுடன் நலமுடன் வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி :
பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர் ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.