இன்று முதல் மாற்றப்படும் 10 விதிகள் என்னென்ன தெரியுமா?

டில்லி

இன்று அதாவது அக்டோபர் 1, 2020 முதல், பல விதிகள் மாறி உள்ளன

இன்று முதல் மோட்டார் வாகன விதிகள், உஜ்வாலா திட்டம், சுகாதார காப்பீடு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விதிகள் மாறுகின்றன. அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். எனவே அக்டோபர் 1 முதல் என்ன மாறப்போகிறது என்பது குறித்த விவரங்கள் இதோ.

1) ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி போன்ற ஆவணங்களின் அசல் சரிபார்ப்பு இல்லை : வாகனம் ஓட்டும்போது ஆர்.சி மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் அசல் உரிமத்தை வைத்திருப்பதற்கான பதற்றம் இதன் மூலம் முடிவுக்கு வரப்போகிறது. இப்போது இந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் நகலை மட்டுமே கொண்டு வாகனம் ஓட்ட முடியும். மோட்டார் போக்குவரத்து விதிகள் 1989 இல் செய்யப்பட்டுள்ள இதுபோன்ற பல்வேறு திருத்தங்கள் குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

அத்துடன் பயணிகளின் வசதியை எளிதாக்குவதற்காக, வாகனங்களைப் பராமரித்தல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் மின்-சலான்கள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு 2020 அக்டோபர் 1 முதல் தகவல் தொழில்நுட்ப போர்டல் ஆன. டிஜி-லாக்கர் அல்லது எம்-பரிவஹன் போன்ற மத்திய அரசின் ஆன்லைன் போர்டல்களின் மூலம் சோதிக்கப்பட உள்ளது.

2) பாதை வழி செலுத்தலுக்கு மட்டுமே மொபைல் போன்கள் : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் மோட்டார் வாகன விதிகள் 1989 இல் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, இனி வாகனம் ஓட்டும்போது ஓட்டுநருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பாதை வழி செலுத்தலுக்கு மொபைலைப் பயன்படுத்தலாம்.

3) இனி எல்பிஜி இணைப்பு இலவசமாக இருக்காது  : பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (பி.எம்.யூ.ஒய்) இன் கீழ், இலவசமாக எரிவாயு இணைப்பைப் பெறுவதற்கான செயல்முறை செப்டம்பர் 30, 2020 அன்று முடிவடைகிறது. பி.எம்.யு.ஒய் கீழ் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காகச் செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்புக்கு மட்டுமே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

4) வெளிநாட்டு நிதி பரிமாற்றத்தில் 5% வரி விதிக்கப்படும் : வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது பொருட்கள் வாங்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் எந்தவொரு தொகையும், மற்றும் 7 லட்சத்துக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்துக்கும், அக்டோபர் 1 முதல் வரி வசூலிக்கப்படும். வெளிநாட்டுச் சுற்றுப்பயண செலவுகளின் வரி அனைத்து தொகைக்கும் 5% ஆக இருக்கும், மற்றபடி வெளிநாட்டுக்குப்  பணம் அனுப்புவதற்கு ரூ. 7 லட்சத்திற்கு மேல் செலவிடப்பட்ட தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்.

5) இனிப்பு விற்பனையாளர்கள் ‘எக்ஸ்பயரி தேதி’ என்ன என அறிவிக்க வேண்டும் : இனிப்பு கடைகள் தங்கள் கடையில் விற்கப்படும் பாக் செய்யப்பட்ட அல்லது பாக் செய்யப்படாத இனிப்புகளின் எக்ஸ்பயரி தேதியை அறிவிக்க வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இனிப்பு கடை உரிமையாளர்களுக்கு அக்டோபர் 1 முதல் இந்த நெறிமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

6) புதிய சுகாதார காப்பீட்டு விதிகள் : கோவிட் -19 பாதிப்புக்குப் பிறகு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகளுக்கான பிரீமியம் உயர உள்ளது. கோவிட் -19 க்குப் பின் சேர்க்கப்படும் புதிய சுகாதார காப்பீட்டு விதிகள் 17 நிரந்தர நோய்களை உள்ளடக்குகிறது.

7) தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் செல்போன்கள் விலை அதிகரிப்பு : அக்டோபர் 1 முதல் இறக்குமதியாகும் திறந்த செல் பேனல்கள் 5% இறக்குமதி வரியை ஈர்க்கும்,  ‘ஆத்மனிர்பர் பாரதத்தின்’ ஒரு பகுதியாக, திறந்த செல் பேனல்களுக்கான உள்நாட்டு உற்பத்தித் திறனை விரிவுபடுத்த அரசு ஆர்வமாக உள்ளது, இதனால் இறக்குமதியைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. இவற்றுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு விலக்கு நேற்றுடன் செப்டம்பர் 30 அன்று காலாவதியாகி உள்ளது.

8) ரிசர்வ் வங்கியின் புதிய க்ரெடிட் மற்றும் டெபிட் அட்டை விதிகள் : இந்திய ரிசர்வ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பாதுகாக்க புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரும்.  இந்தபுதிய வழிகாட்டுதல்களின்படி, அட்டை பயனர்கள் இப்போது சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத அட்டை ஆகியவற்றிற்கான விருப்பத்தேர்வைப் பதிவு செய்யவோ அல்லது சேவையிலிருந்து விலகவோ, வரம்புகளை அதிகரிக்கவோ பதிவு செய்ய முடியும்.

9) கடுகு எண்ணெயை வேறு எந்த சமையல் எண்ணெயுடன் கலப்பதற்கு தடை :  அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடுகு எண்ணெயை வேறு எந்த சமையல் எண்ணெயுடன் கலப்பது தடை செய்துள்ளது. இந்த தடை அக்டோபர் 1, 2020 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

10) டி சி எஸ் வருமான வரி முறை மாற்றம் :  நிதிச் சட்டம், 2020 வருமான வரிச் சட்டத்தில் 1961 இல் 194-ஓ என்ற புதிய பிரிவைச் சேர்க்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1, 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.  இதன்படி ஒரு இ-காமர்ஸ் ஆபரேட்டர் மொத்த வரியின் 1 சதவீத வீதத்தில் வருமான வரியைக் கழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொருட்களின் விற்பனை அல்லது சேவை வழங்கல் அல்லது இரண்டுக்கும்மற்றும், டிஜிட்டல் அல்லது மின்னணு வசதி அல்லது தளம் மூலம் அளிக்கப்படும் அனைத்து விற்பனை மற்றும் சேவைகளுக்கும் இது பொருந்தும்.