டில்லி

ன்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படும் வேளையில் அதை இயற்ற உதவிய 15 பெண்களைக் குறித்து இங்கு காண்போம்.

கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.   அந்த தீர்மானத்தின்படி இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.   இதையொட்டி இன்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது   இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த 15 பெண்களைக் குறித்த விவரங்களை இங்கு காண்போம்.

1.       அம்மு சாமிநாதன் : கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அணக்கரா என்னும் ஊரில் ஒரு இந்து மதத்தின் உயர் வகுப்பில் பிறந்தவர் அம்மு சாமிநாதன்.   கடந்த 1917 ஆம் வருடம் இவர் அன்னிபெசண்ட், மார்கரெட் கசின்ஸ், மாலதி பட்வர்த, திருமதி தாதாபாய் மற்றும் அம்புஜம்மாள் ஆகியோருடன் இணைந்து இந்தியப் பெண்கள் சங்கத்தை தொடங்கினார்.  இவர் சென்னை மாகாணம் சார்பில் அரசியலமைப்பு குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார்.  இவர் மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் இந்தியத் திரைப்பட சம்மேளனம், இந்தியச் சாரணர் படை மற்றும் திரைத் தணிக்கை வாரிய உறுப்பினராகப் பணி புரிந்துள்ளார்.

2.       தாட்சாயனி வேலாயுதம் : கொச்சின் பகுதியில் உள்ள பால்கடி தீவில் 1912 ஆம் வருடம் ஜூலை 4 ஆம் தேதி பிறந்த தாட்சாயணி வேலாயுதன் ஒடுக்கப்பட்ட இனத்தவரின்  தலைவராக இருந்தார்.   இவர் பிறந்த புலையர் வகுப்பில் பட்டப் படிப்பு படித்த முதல் தலைமுறையை சேர்ந்தவராக இவர் இருந்தார்.   அப்போதைய சமூகக் கட்டுப்பாட்டை மீறி இவர் ரவிக்கை அணிந்து புரட்சி செய்தார்.   இவரை 1945 ஆம், ஆண்டு கொச்சின் சட்டப்பேரவை உறுப்பினராக அரசு நியமனம் செய்ததின் மூலம் தலித் இனத்தின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் என்னும் பெருமையைப் பெற்றார்.

3.       பேகம் ஐசஸ் ரசூல் : உத்திரப் பிரதேச மாநிஅ மாலெர்கோட்லா அரச பரம்பரையில் பிறந்த பேகம் ஐசஸ் ரசூல் சமீந்தாரான நவாப் ஐசஸ் ரசூலை சிறுவயதிலேயே மணம் புரிந்தார்.   இவரும் இவர் கணவரும் முஸ்லிம் லீக் கட்சியில் இனைந்து தேர்தலில் போட்டியிட்டனர்.  கடந்த 1937 ஆம் வருடம் இவர் சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று முதல் இஸ்லாமியப் பெண் உறுப்பினர் என்னும் பெருமையைப் பெற்றார்.   1950 ஆம் வருடம் முஸ்லிம்லீக் கலைக்கப்பட்டதால் இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.  இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் சமூகநீதி மற்றும் சிறுபான்மை நல்த்டுறை அமைச்சராகவும் பணி புரிந்த இவருக்குக் கடந்த 2000 ஆம் வருடம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

4.       துர்கா பாய் தேஷ்முக் : கடந்த 1909 ஆம் வருடம் ராஜமுந்திரியில் பிறந்த துர்காபாய் தேஷ்முக் தனது 12 ஆம் வயதில் ஆந்திர கேசரி என அழைக்கப்படும் பிரகாசத்துடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துக் கொண்டுள்ளார்  1930 ஆம் வருடம் மதராசில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு பெற்ற இவர் ஆந்திர மகிள சபா என்னும் பெண்கள் அமைப்பைத் தொடங்கி கல்வி மற்றும் சமூக நலப் பணிகளைச் செய்து வந்தார்.  பல்வேறு பதவிகளை வகித்த இவருக்கு 1975 ஆம் வருடம் பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

5.       ஹன்சா ஜீவராஜ் மேத்தா : கடந்த 1897 ஆம் வருடம் ஜூலை 3 ஆம் தேதி பரோடா சமஸ்தான திவான் மனுபாய் நந்த்சங்கர் மேத்தா என்பவரின் மகளாக பிறந்த ஹன்சா மேத்தா இங்கிலாந்தில் இதழியல் மற்றும் சமூகவியல் பட்டப்படிப்பு படித்துள்ளார்.   இவர் தனது தாய் மொழியான குஜராத்தி மொழியில் குழந்தைகளுக்காகப் பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.  கலிவரின் பயணம் உள்ளிட்ட பல ஆங்கில புத்தகங்களை இவர் குஜராத்தியில் மொழி பெயர்த்துள்ளார்.  அகில இந்திய மகளிர் சங்கத்தில் இவர் தலைவியாக இருந்துள்ளார்  அத்துடன் பல்கலைக்கழக துணை வேந்தர், கல்வித்துறை இயக்குநர், உள்ளிட்ட பல கல்வித்துறை பதவிகளில் இருந்துள்ளார்.

 

 

அடுத்த பகுதிகளில் மேலும் பல விவரங்களைக் காண்போம்.