தமிழகத்தில்  கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள்

சென்னை

மிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாக அரசு  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கபடோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று மட்டும் 17 பேருக்குப் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளதால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் டில்லியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்

நோயாளி எண் 51 – மதுரையை சேர்ந்த 25 வயது ஆண் குடும்பத்தினரால் தொற்று ஏற்பட்டவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோதிக்கப்பட்டவர்.

நோயாளிகள் 52-55 – அமெரிக்காவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், (52 வயது பெண்,76 வயது பெண், 15 வயது பெண் மற்றும் 20 வயது ஆண்) சென்னை தனியார் மருத்துவமனையில் சோதிக்கப்பட்டவர்கள்

நோயாளிகள் 56-65 –  ஈரோட்டைச் சேர்ந்த 10 ஆண்கள்.  இவர்கள் டில்லியிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்டவர்கள் ஆவார்கள்.  இவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சோதிக்கப் பட்டவர்கள்

நோயாளி எண் 66-சென்னை பிராட்வேயில் உள்ள 50 வயது பெண், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோதிக்கப்பட்டவர்.

நோயாளி எண் 67- குளித்தலையைச் சேர்ந்த 42 வயது ஆண் டில்லியில் இருந்து வந்தவர்.  கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதிக்கப்பட்டவர்.

நோயாளிகள் அனைவரும் நன்கு உள்ளதாகவும் மருத்துவமனைகளில் தனிமைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி