ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் : மாநிலங்களின் கருத்தும் வரி குறைப்பும்

வுகாத்தி

ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் வரிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

ஜி எஸ் டி கவுன்சிலின் 23ஆவது கூட்டம் இன்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்றது.  இதில் பல மாநில அமைச்சர்கள் கலந்துக் கொண்டு ஜி எஸ் டி குறித்து தங்களின் குறைகளை தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து ஜி எஸ் டி யில் பல பொருட்களின் வரிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கவுன்சில் அறிவித்துள்ளது.

தற்போது 177 பொருட்களுக்கு ஜி எஸ் டி குறைக்கப்பட்டுள்ளது.  மாற்றி அமைக்கப்பட்ட ஜி எஸ் டி விதிகளின் படி 50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது.  வரிகள் குறைக்கப்பட்ட பொருட்களில் ஜவுளி  டிராக்டர்கள், மற்றும் டிராக்டர்களின் உதிரி பாகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கூட்டத்தில் கலந்துக் கொண்ட டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோதியா, ”பல பொருட்களுக்கு ஜி எஸ் டி வரிவிதிப்பு 28% ஆக இருப்பது கறுப்புச் சந்தையை உருவாக்கும்” எனக் கூறினார்.  அதே போல் புதிச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகபட்ச ஜி எஸ் டி என்பது மிகக் குறைந்த பொருட்களுக்கே விதிக்க வேண்டும் எனவும் அதிகபட்சமாக 18% மட்டுமே ஜி எஸ் டி இருக்க வேண்டும் எனவும் கூறினார்.  அத்துடன் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர்களில் பலர் ஜி எஸ் டி கணக்கு பதிவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் பலரும் அதிகபட்ச ஜி எஸ் டி 28% ஆக இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 0, 5, 12, 18, 28, ஆகிய விகிதங்களில் வரி விதிப்பு இருக்கும் போது ஒரு பொருள் ஒரே வரி என்பது தவறானது என அரியானா மாநில நிதி அமைச்சர் தெரிவித்தார்.  இந்த கருத்துக்களை அருன் ஜேட்லி கேட்ட பின் விரைவில் ஜி எஸ் டி கணக்கு சமர்ப்பிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.