அறிவோம் தவறுகளை – தூங்குமூஞ்சி மரம்

அறிவோம் தவறுகளை – தூங்குமூஞ்சி மரம்

தூங்குமூஞ்சி மரம் (Albizia Saman).

அமெரிக்கா உன் தாயகம்!

உன் இன்னொரு  பெயர் காட்டுவாகை!

இரவுக் காலங்களில் மேகமூட்ட நேரங்களில் உன் இலைகளை மூடிக்கொண்டு தூங்குவதால் நீ தூங்குமூஞ்சி மரமானாய்!

மலச்சிக்கல் இரத்த அழுத்தம், தலைவலி வயிற்றுவலி,வயிற்றுப் போக்கு குடல் அழற்சி,  சளி, தொண்டைப்புண், காச நோய், வீக்கம், நெறிக்கட்டி ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

மலர், இலை, வேர், காய், பட்டை என எல்லாம் பயன்படும் நல்ல மரமே!

கொலம்பியா நாட்டில் மயக்க மருந்து தயாரிக்கப் பட்டை தரும் பயன் மரமே!

தேநீர் தயாரிக்கப் பட்டை தரும் பசுமைமரமே!

விவசாயிகளுக்கு உரம் தரும் இலை மரமே!

இந்தோனேசியாவின் ஆய்வுப்படி ஆண்டிற்கு 25 டன்.கார்பன் டை ஆக்சைடு உட்கொள்ளும் இனிய மரமே!

சிவப்பு, வெள்ளை நிற  பூப் பூக்கும் செம்மை    மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்

நெய்வேலி.