அறிவோம் தாவரங்களை – உசிலை மரம்

உசிலை மரம்.(Alibizia Amara)

எல்லா இடங்களிலும் இனிதே வளரும் நல்ல  மரம்  நீ!

ஆப்பிரிக்க காடுகளில் அதிகம் காணப்படும் அழகு  மரம் நீ!

ஓர் ஊர் முழுக்க நீ இருப்பதால் அந்த  ஊர்ப் பெயரே உசிலம்பட்டி  ஆனது.!

கருவாகை,ஊஞ்சல் மரம், சீக்கிரி மரம்,  அரப்பு மரம், துரிஞ்சல் மரம் எனப் பல்வகையில் விளங்கும் நல்வகை மரம்  நீ!

பேன், ஈர் ஆகியவற்றைப் போக்கும் காவலன்நீ!

கேசப்பராமரிப்பில் இயற்கை வரம் நீ!

வழுக்கையைத் தடுக்கும் கேடயம் நீ!

கடலாடி வனப்பேச்சி அம்மன் கோயில் தல மரம் நீ!

தீக்காயங்கள், புண்கள்,பொடுகு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

கால்நடைகளுக்குத் தீவனம் தரும் இலை   மரமே!

மண்ணரிப்பைத் தடுக்கும் தடுப்பானே!

ஏழைகள் அடுப்பின்  விறகு  மரமே!

விவசாயத்தின் அடி உரமாகப் பயன்படும் இலை மரமே!

உடல் சூட்டைத் தணிக்கும் உன்னத மரமே!

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் வினோத மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க வளர்க!உயர்க!

நன்றி : பேரா. முனைவர் ச.தியாகராஜன் (VST)

நெய்வேலி.

📞 9443405050