அறிவோம் தாவரங்களை – அரைகீரைச்செடி

அரைகீரைச்செடி (Amarantus Tristis)

உன் இன்னொரு பெயர் பருப்புக்கீரை!

அறுத்து விட்டாலும் வளர்ந்து பலன்தரும் அழகு செடிநீ!

 செம்மண் மணல் நிறைந்த இருமண் பாட்டு நிலத்தில் இனிதாய் வளரும்கீரைசெடி நீ!

30 செ.மீ.வரை உயரம் வளரும் உன்னத செடி நீ!

சித்த மருத்துவத்தில் பயன்படும் செம்மை  செடி நீ!

குடல்புண்கள், நரம்புத் தளர்ச்சி,  தூக்கமின்மை தேமல்,சொரி,சிரங்கு வாயு, வாத நோய், நினைவாற்றல் இதய நலம்,நுரையீரல் நலம், நரம்பு வலிமை,  மூளை வளர்ச்சி,பித்தம், தலைமுடி உதிர்தல், மாலைக்கண் நோய், மலச்சிக்கல், மாதவிடாய், சளி ஜலதோஷம்,  ஜன்னி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

கூட்டு,   வடை, மசியல், பொரியல் எனப் பல் வகையில் பயன்படும் நல்வகை கீரை செடி நீ!

ஓராண்டு  வரை பயன் தரும் உன்னத கீரை செடியே!

இரும்புச்சத்து,சுண்ணாம்புச் சத்து நிறைந்த இனிய கீரைச் செடியே!

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருந்து செடியே!

உடலுக்கு வலிமை தரும் உன்னத செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.