அறிவோம் தாவரங்களை – அனிச்சம்பூ

அனிச்சம்பூ  (Anagallis arvensis)

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம்!

ஈரமான நிலப்பகுதி, நீரோடையின் கரைகள், தரிசு நிலங்களில் வளர்ந்திருக்கும் தங்கச் செடி நீ!

இந்தியா, இலங்கை, மலேசியா நாடுகளில் காணப்படும் இனிய செடி நீ!

30 செ.மீ. வரை உயரம் வளரும் முதன்மைச் செடி நீ!

மூச்சுக் காற்று பட்டவுடன் வாடிப் போகும் ரோஷக்காரச் செடி நீ!

மஞ்சள், நீல நிறப் பூக்கள் கொடுக்கும் மகிமைச் செடி நீ!

‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என வள்ளுவர் போற்றும் வண்ண மலர்ச் செடி நீ!

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய சரித்திர மலர்ச்செடி நீ!

தலையிலும் கழுத்திலும் அணியப்பட்ட தார் மாலை செடி நீ!

நீண்ட மலர்க் காம்பு கொண்ட நல்ல செடி நீ!

அழிந்து வரும் அரிய செடியே! சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள்  போற்றிப் புகழும் புனிதச் செடியே!

பட்டாணி வடிவக் கனி கொடுக்கும் பசுமைச் செடியே!

தலைகீழ் ஈட்டி வடிவ இலைகளை உடைய இனிய செடியே!

குழையும் மலரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.