அறிவோம் தாவரங்களை – மரமஞ்சள்

அறிவோம் தாவரங்களை – மரமஞ்சள்

மரமஞ்சள்.(Berberis aristata).

அடர்ந்த காடுகளில் வளரும் சிறு வகை தாவரம் நீ !

காலேயகம், தாறுவி என இரு வேறு பெயர்களில் விளங்கும் இனிய சிறு மரம் நீ!

கசப்புச் சுவையும்,கார்ப்புச் சுவையும் கொண்ட பட்டை மரம் நீ!

டெட்டானஸ் கிருமியைத் தடுக்கும் சிறப்பு மருந்து மரம் நீ !

கொராணா வைரஸுக்கான  குடிநீருக்குப் பட்டை தரும்  குட்டை மரம் நீ!

சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்பு மரம் நீ!

பாரதம், நேபாளம் ,இலங்கை, நாடுகளில் அதிகம்  வளரும்  அழகு மரம் நீ!

முகப்பரு, கரும்புள்ளி, விஷக்கடி,  சிறுநீர்ப்    பிரச்சனை, மாதவிடாய் ,நீரிழிவு ,அலர்ஜி தோல்நோய்,   வயிற்றுப் போக்கு,மஞ்சள் காமாலை, கண்நோய், தலை நீரேற்றம், மூக்கடைப்பு, உடல் வெப்பம், வீக்கம்,வெள்ளை,பெரும்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி  நீ!

பட்டை, இலைகள்  என எல்லாம் பயன்படும்  நல்லமரமே!

உடல்வலியைப்  போக்கும் உன்னத மருந்து மரமே!

தண்டுப் பகுதிகள் மருந்தாகப் பயன்படும் தனிவகை மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க !உயர்க !

நலநாள் வணக்கம்.

பேரா. முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050.