அறிவோம் தாவரங்களை – பீட்ரூட் செடி

அறிவோம் தாவரங்களை – பீட்ரூட் செடி

பீட்ரூட் செடி.(Beta vulgaris subsp).

ஐரோப்பா உன் தாயகம்!

செங்கிழங்கு,அக்காரக் கிழங்கு என இருவகையில் விளங்கும் இனிய செடி நீ!

பீட் தாவரத்தின் வேரடிக்கிழங்கு நீ!

வட அமெரிக்காவில் நீ ‘பீட்.’ மேசை வகை பீட், சர்க்கரை பீட், பொன் பீட், சிவப்பு பீட் என பல் வகைப் பெயர்களில்  பரிணமிக்கும்  கிழங்கு செடி நீ!

கிரேக்கம்,   எகிப்து, ரோமானிய நாடுகளில் வளர்க்கப்பட்ட வண்ண செடி நீ!

முதல் உலகப்போரில் தொழிலாளர்களின் பிரதான உணவு நீ!

செரிமானம், குருதி பெருக்கம், நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய், அனிமியா, எலும்பு, பல் வலி, கருத்தரிப்பு, கொழுப்பு குறைப்பு, கல்லீரல் நோய், கண் புரை நோய், கூந்தல் பராமரிப்பு, தலைவலி  மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சாய மை தயாரிப்பு, பனிக்குழைவு, இன்கூழ், எனப் பல்வகையில் பயன்படும் நல்வகை கிழங்கு செடி நீ!

சிவப்பு, மஞ்சள் நிற கிழங்கு தரும் சிறப்புச் செடியே!

உண்பதற்குக் கீரைத் தரும் உன்னத செடியே!

கலோரிகள் நிறைந்த கற்பகமே!

சூப்பு, கூட்டு, பொரியல், அல்வா, ஜூஸ், சாம்பார் என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல கிழங்கு செடியே!

இனிப்புச் சுவை கொண்ட கிழங்குச் செடியே!

செம்மண் நிலத்தின் தங்கச் செடியே!

60  நாட்களில் பலன் தரும் அற்புச் செடியே!

ஹெக்டேருக்கு 25 டன்வரை கிழங்கு தரும் பணப் பயிரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050.