அறிவோம் தாவரங்களை –  பதிமுகம் மரம்/சாயமரம்

அறிவோம் தாவரங்களை –  பதிமுகம் மரம்/சாயமரம்

பதிமுகம் மரம்/சாயமரம்  (Biancaea Sappan)

பாரதம்,மலேசியா உன்தாயகம்!முள்ளினத்தைச்சேர்ந்த நன்மரம் நீ!

ஆசிய நாடுகள், தென்னிந்தியா,  மேற்கு வங்காளம் ஆசிய நாடுகளில் அதிகமாய்க் காணப்படும் அற்புத மரம்நீ!

9 மீ வரை உயரம் வளரும் உன்னத மரம் நீ!

சிறுநீர்க் கோளாறு, இரத்தச் சுத்திகரிப்பு, கொழுப்புக் குறைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய், கர்ப்பப்பைக் கோளாறு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ஒப்பனை, அழகு சாதனப் பொருள்கள், கைவினைப்பொருட்கள், மரச்சாமான்கள், வீட்டுத்தரை மருந்துகள், கைவினைப் பொருள்கள் மேல் வண்ணம் மூட்டல் ஆகியவற்றிற்குப்  பயன்படும் நயன்மிகு மரம்நீ!

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள உலகப்புகழ் ‘பத்தமடை’ பாய்க்கு இயற்கைச் சாயச்சாறு தரும் கற்பகத்தரு நீ!

கேரள நாட்டில் குடிநீராகப் பயன்படும் பட்டை மரம் நீ!

இலை, பூ, மரத், தண்டு,வேர் என எல்லாம் பயன்படும் நல்ல மரமே!

இந்திய மருத்துவத்தில் ‘லூக்கோல்’மருந்தில் பயன்படும் மருந்து மரமே!

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் அரிய மரமே!

இரு சிறகுகள் போன்ற சிறு இலைகளை உடைய பெரு மரமே!

மஞ்சள் நிற மணப் பூக்களைக் கொண்ட மகத்துவ மரமே!

தண்ணீரைச் சுத்திகரிக்கும் நன்மரமே!

மழை வளத்தைத் தூண்டும் தழை மரமே!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் காவல் மரமே!வறட்சியைத் தாங்கி வளரும் புரட்சி மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.