அறிவோம் தாவரங்களை – கொன்றை

கொன்றை (Cassia fistula).

பாரதம் உன்  தாய்வீடு!

கேரளாவின் மாநில  மலர் நீ!

தாய்லாந்தின் தேசிய மரம் மற்றும் பூ!

66 அடி வரை உயரம் வளரும் வைர கட்டைமரம்!

கனடா, இலங்கை என உலக நாடுகளில் வளரும் மரம் !

நீள்சடையோன், தாமம் கொன்னை, சரக்கொன்றை, பிரணவ என பல்வேறு பெயர்களில் இருக்கும் மரம்!

திருப்பத்தூரில் கொன்றை வனம் நீ!

சில இடங்களில் நீ சிவபெருமானின் தலமரம்!

சர்க்கரை நோய்க்கு ஏற்ற துவையல் நீ !

பித்தம் நீக்கும் சித்த மருந்து!

காது  நோய்க்குக்

கண்கண்ட மருந்து!

புத்தாண்டில் மகிழ்ச்சியும் போகமும் தரும் தெய்வ மரம்!

படர் தாமரையைப் படராமல் காப்பாய்!

தாய்லாந்து அரசும் கேரள அரசும் உனக்குத்  தபால் தலை வெளியீட்டுத் தார்மீக மரியாதை தந்தன!

ஆலய வழிபாட்டில் அற்புத பூ!

சிவன் செஞ்சடை மேல் மிளிர்கின்ற மாலை !

ஆயுர்வேதத்தின் ராஜமரம் நீ!

முல்லை நிலத்தின் முதன்மை மரமே!

மருந்தாகிப் பயன்தரும் பெரும் தாவரமே!

தில்லைத் திருநகர் உள்ளவரை நீ திருவும் உருவும் பெற்றுத் திகழ்க! வளர்க!.

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்((VST).

நெய்வேலி.

📱9443405050