அறிவோம் தாவரங்களை – கிளுவை மரம்

கிளுவை  மரம்.(Commiphora Caudata).

வீட்டு வாசல்,வேலிகளில் வளர்க்கப்படும் சிறு வகை மரம் நீ !

தஞ்சை,நாகை மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்சிறுதாவரமரம்நீ!

சிறு கிளுவை,பெருகிளுவை செங்கிளுவை,  வெண் கிளுவை எனப் பல்வகைகளில் பரிணமிக்கும் நல்வகை மரம் நீ!

திருக்கடைமுடி (நாகை) கோயில் தலமரம் நீ !

பஞ்ச வில்வங்கள் வகை மரங்களில் நீயும் ஒன்று !

பொன்வண்டுகளுக்கு இலை தரும் உணவு மரம் நீ!

சிறுநீரக நலம், கல்லீரல் வீக்கம், சிறுநீரகக் கல் அடைப்பு, ,மூட்டுத் தேய்மானம், மார்புச்சளி, வெண்குஷ்டம், பக்க வாதம், மலச்சிக்கல், மூலம், எடை குறைப்பு, மதுப் பழக்கம் நீக்கம், சுவாசப் பாதிப்பு,  தோல் நோய்கள், வயிற்றுக் கடுப்பு, குருதி சீழ்க் கசிவு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

உன் நிழல் பட்டாலே வியாதிகள் மறையும் வினோத மரம் நீ!

வேர், தண்டு, இலை, பிசின், பட்டை என எல்லாம் பயன்படும் நல்வகை மரமே!

முக்கூட்டு இலைகளை உடைய மூலிகை மரமே!

மென்மையான கட்டை கொண்ட மேன்மை மரமே!

கால்நடைகளின் தீவனமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050.