அறிவோம் தாவரங்களை – நிலப்பனை

நிலப்பனை. (Curculigo Orchioides).

தரிசு நிலங்களில் தானாக வளரும் தங்கச் செடி நீ !

மருந்தாக பயன்படும் கிழங்குச் செடி  நீ !

புணர்ச்சியில் இச்சை தரும் வயாகரா நீ!

ஆங்கிலத்தில்   நீ ‘கோல்டன் ஐ கிராஸ்’!

35 செ.மீ. வரை உயரம் வளரும் முதன்மை செடி நீ!

மேக முத்திர வெப்பம், வெண்குஷ்டம், விலா குத்தல், ஒழுக்கு பிரமேகம், நீலஞ்சன நோய், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, ஆண்/பெண் மலடு,  ஆண்மை அதிகரிப்பு,  நரம்பு தளர்ச்சி, மூச்சுக் குழாய் அழற்சி, கண் அழற்சி,அஜீரணம் , வாந்தி வயிற்றுப்போக்கு ,இடுப்புவலி ,நாய்க்கடி, மூட்டுவலி இரைப்பை & குடல் வலி, காய்ச்சல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

உடலுக்குப் பலம் தரும் உன்னத செடியே!

தங்க நிற பூக்கொடுக்கும் கற்பக செடியே !

ஈட்டிவடிவஇலைசெடியே!

வீட்டிலும் வளரும் நாட்டுச் செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050