அறிவோம் தாவரங்களை – ஆரோரூட் கிழங்கு செடி

ஆரோரூட் கிழங்கு செடி  (Curcuma angustifolia)

தென் அமெரிக்கா உன் தாயகம்!

சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு அம்புரூட் எனும் பெயரில் விளங்கிய அழகு செடி நீ!

மலை அடிவாரத்தில் தானே வளரும் செடி நீ!

5 அடிவரை உயரம் வளரும் அற்புதச் செடி நீ!

இனிப்புச் சுவையும் கசப்புச் சுவையும் கொண்ட இனிய செடி நீ!

கூவமா கிழங்கு, கூகைக்கிழங்கு, மாக்கிழங்கு என மூவகைப் பெயரில் விளங்கும் முதன்மைச் செடி நீ!

சிறுநீர் நோய்கள், உடல் சூடு, காய்ச்சல், நீர்ச்சோகை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, தோல் நோய்கள், செரிமானம், இதய நலம், எடைகுறைப்பு, விஷக் கடி, காயம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

இந்தியில் நீ ‘டிகோர்’!

சீனாவில் நீ ‘ஜூயு’!பிஸ்கட், புட்டு, ஜெல்லி, கேக், சாஸ், தேனீர் எனப் பல வகையில் பயன்படும் நல் வகைச் செடி நீ!

‘மேனியிடும் வாய்க்கு மிருதுவாம்…. கூகைக் கிழங்கு’ என அகத்தியர் குணபாடம் போற்றும் அற்புத மூலிகைச் செடி நீ!

முட்டை வடிவ இலைகளையுடைய குட்டை செடியே!

ராணி விக்டோரியா விரும்பிய தேனீர் செடியே! உடலுக்கு வலிமை தரும் உன்னதக் கிழங்கு செடியே!

மனப் பதற்றத்தைப் போக்கும் மருந்து செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி :  பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.