அறிவோம் தாவரங்களை – மஞ்சள்

அறிவோம் தாவரங்களை – மஞ்சள்

மஞ்சள் (Curcuma longa)

பாரதம் உன் தாயகம்!

ஏழைகளின் குங்குமப்பூ!

இஞ்சிச்செடியின் தம்பிச்செடி!

கனடா நாட்டு வண்ணச் செடி!

மணப்பெண்ணின் மங்கலநாண்!

மகளிர் முகத்திற்கு அழகைக் கூட்டும் வாசனைக்கிழங்கு!

பொன்னின் நிறம் கொடுக்கும்  தமிழ் மண்ணின் தாவரம்!

புத்தாடைகளில் ஒட்டப்படும் சின்னப்பொட்டு!

காட்டு மஞ்சள், கறி மஞ்சள், குரங்கு மஞ்சள், குங்குமம் மஞ்சள் என பத்து ரெண்டு வகை பெற்றுப் பவனிவரும் பூண்டுச்செடி!

நிப்பான்  நாட்டில் நீ இனிக்கும் தேநீர்!

திருவிழா மாமனைத் தெருவிலே குளிப்பாட்டும் மஞ்சள் நீர் நீ !

பொங்கல் பானையின்   தங்கமாலை !

ஆயுர்வேதத்தின் அற்புத மருந்து!

மூக்குச்சளியை நீக்கும் குட்டி ஊதுபத்தி!

காச நோய்க்குக் கண்கண்ட  மருந்து!

காயம், வீக்கம் தன்னை  மாயமாய் மறையச் செய்வாய்!

வீட்டைக்   காக்கும் கிருமி  நாசினியே!

இயற்கை தந்த வரமே!

உன்னை என்றும் வணங்கும் என் இரு கரமே!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்((VST).

நெய்வேலி.