அறிவோம் தாவரங்களை ஈட்டி மரம்.
ஈட்டி மரம்.(Dalbergia latifolia)
தென்னிந்தியா உன் தாயகம்! சுமார் 3500. ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்துவரும் நயன்மரம் நீ!
ஆங்கிலத்தில் நீ ரோஸ்வுட் !.
தோதகத்தி, கருங்காலி என இரு வகையில் விளங்கும் இனிய மரம் நீ!
இரும்பைப் போல் வலிமை உடைய மரம் நீ.
ஆகையால் ஈட்டி மரமானாய்! தேக்கு மரத்தை விட 40  விழுக்காடு வலிமை பெற்ற மரம் நீ!
ஆனைமலை வணிகக் குழுவினர்களால் அன்றைய வெலிங்டன் சீமாட்டிக்கு அன்பளிப்பாக
அளிக்கப்பட்ட உன்னத வேலைப்பாடுகளுடன் ஆன ஒரே பலகை மேசை நீ!
ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தில் வீடுகளின் உத்தரங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழமை மரம் நீ !
சர்க்கரை நோய், பித்தம், வயிற்றுப்புண், கொழுப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை மரம் நீ!
மேசை, நாற்காலி, பீரோ, அலமாரி, ரயில் பெட்டிகள் செய்யப் பயன்படும் செம்மைமரம் நீ!
1994ஆம் ஆண்டு முதல் அரசால் பாதுகாக்கப்படும் அரிய மரமே! சுகமான மணம் வீசும் மரகத மரமே!
தண்ணீரில் கிடந்தாலும் தரம் மாறாத் தங்க மரமே!
பூச்சிகளும் பூஞ்சான்களும் அண்டாத புனித மரமே!
வறட்சியைத் தாங்கி நிற்கும் புரட்சி மரமே!
அழிந்து வரும் அரிய மரமே!
ஒரு கன அடி 18. ஆயிரம் வரை மதிப்புடைய தங்க மரமே!
நீவிர் செழித்து வளர்க ! உயர்க! வாழ்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050