கடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் இறுதிபகுதி

எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்றார் கடவுள் . சொல்லியபடி உலகை  காக்க அவர் எடுத்த அவதாரங்களை மனித வாழ்க்கையோடு பொருத்தி பார்த்தால் , நம் இந்து மதத்தின் மகத்துவம் நம்மை பெருமைக் கொள்ள வைக்கும் .

ஏற்கனவே ஆறு அவதாரங்களை பற்றி பதிந்தோம்.  இன்று 3 ஆம் இறுதி பகுதி

 

ராம அவதாரம்:

 திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது…

 இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. ஏகபத்தினி விரதனாகப் போற்றப்படும் இந்த அவதாரத்தில்  ,  அடக்கம், பொறுமை, ஆற்றல், அரசாட்சி திறமை, எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல் ஆகியவற்றிற்கு உதாரணமாகக் இறைவன் கொள்ளப்படுகிறார்.

 பலராம அவதாரம்:

 இல்லறத்தில் நுழைந்தப் பின்  உடன் பிறந்தோர், சுற்றத்தார், மற்றும் உலகோர்க்கு கடமையாற்றுவது…

இது திருமாலின் எட்டாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இந்த அவதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. திருமால் பள்ளிகொள்ளும் ஆதிஷேசனே பலராமனாக அவதரித்தாகக் நம்பிக்கை .

கிருஷ்ண அவதாரம்:

முதுமையில் இவ்வுலக பற்றற்று இறைவனை தன்னுள் உணர்ந்து அடுத்த சந்ததிக்கு அதை உபதேசித்து வழிகாட்டுவது…

 துவார யுகத்தில் நடைபெற்ற திருமாலின் ஒன்பதாவது அவதாரம் இது . ஆறில் இருந்து அறுபது வரை   எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட அவதாரம்.

கல்கி அவதாரம்

கலியுக முடிவில் நடைபெற உள்ள இந்த அவதாரம் அதர்மம் தாங்க முடியாத போது நடக்கும்.   இந்த அவதாரத்துடன் உலகம் முழுவதுமாக அழிந்து விடும் என நம்பப்படுகிறது.