அறிவோம் தாவரங்களை – கேரட் செடி

கேரட் செடி.(Daucus carota subsp. sativus).

ஐரோப்பா,தென் கிழக்கு ஆசியா உன் தாயகம்!

மலைப் பகுதிகளில் வளரும் மருத்துவச் செடி நீ !

ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை, கறுப்பு, மஞ்சள் எனப் பல்வகை வண்ணங்களில் பரிணமிக்கும் வேர்க் காய்கறிநீ!

ரத்தசோகை, கொழுப்புக்குறைப்பு, ஆண்மை அதிகரிப்பு, வயிற்றுவலி,  குடற்புண், அஜீரணம், புற்றுநோய், தோல் நோய், அரிப்பு, பல் நோய், நரம்பு மண்டல வலிவு, மார்பு வலி, நீர்க் கடுப்பு, கல்லடைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சூப், சாறு, ஜூஸ், கூட்டு,பொரியல் அல்வா ,சட்னி,கேரட் சாதம் செய்ய பயன்படும் ஆரஞ்சு நிறக் கிழங்குச் செடி நீ!

இலை, விதை, வேர், கிழங்கு எனப் பல்வகையில் பயன்படும் வகையில் நல்வகை மலைச்  செடி நீ!

பொட்டாசியம் சத்து நிறைந்த குட்டிச்செடியே!

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் உன்னத கிழங்குச் செடியே!

செம்மண் நிலத்தில் செழிப்பாய் வளரும் பச்சை செடியே!

120 நாட்களில் பலன் கொடுக்கும் நூதன செடியே!

ஹெக்டேருக்கு 30 டன் வரை கிழங்கு தரும் அழகு செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.