தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3536 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10,691 பேர் உயிர் இழந்து 6,42,152 பேர் குணம் அடைந்து தற்போது 38,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,90,949 பேர் பாதிக்கப்பட்டு 3,536 பேர் உயிர் இழந்து 1,75,128 பேர் குணம் அடைந்து தற்போது 12,285 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 41,427 பேர் பாதிக்கப்பட்டு 634 பேர் உயிர் இழந்து 39,094 பேர் குணம் அடைந்து தற்போது 1,699 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 40,108 பேர் பாதிக்கப்பட்டு 524 பேர் உயிர் இழந்து 35,689 பேர் குணம் அடைந்து தற்போது 3,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.