அறிவோம் தாவரங்களை – குதிரை வாலி
குதிரை வாலி  Echinochloa frumentacea.
ஆசியா,ஜப்பான் உன் தாயகம்!
குதிரை வால் போன்ற கதிரைப் பெற்றுத் திகழ்வதால்  நீ குதிரைவாலி  ஆனாய்!
சங்க இலக்கியங்களில் நீ ‘வால் அரிசி’ !
உன் மற்றொரு  பெயர் நாட்டுப்  புல்லரிசி. புன்செய் நிலத்தில் பயிரிடப்படும் தானியப் பயிர் நீ!
38 வகைகளில் வளர்ந்திருக்கும் முத்து பயிர் நீ!
நேபாளம்,  இந்தியா, பாகிஸ்தான் எனப் பல்வேறு நாடுகளில் பரிணமிக்கும் பசுமைப் பயிர் நீ!
சீமைக் குதிரைவாலி,   நெல் சக்களத்தி குதிரைவாலி, மாவுக்குதிரைவாலி, தானியக் குதிரைவாலி, சித்திரக் குதிரை வாலி, கம்புக் குதிரை வாலி, மலட்டுக் குதிரை வாலி  எனப் பல்வேறு   பெயர்களில் பரிணமிக்கும்நல்வகைப்பயிர் நீ!
நீரிழிவு நோய்,மலச்சிக்கல், ரத்தசோகை ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகைப் பயிர்!
பொங்கல்,சாதம்,கூழ்,இட்லி, உப்புமா, பக்கோடா, முறுக்கு, சீடை எனப் பல்வேறு வகையில் பயன்படும் பயிர் நீ!
இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் அதிகம் உடைய   இனிய  பயிர்  நீ!கால்நடைகள், பறவைகளின் தீவனப்பயிரே!
ஒரு ஏக்கருக்கு 700. கிலோ வரை விளையும் இனிய பயிரே
தட்டைப்பயிர் ஊடுபயிராக வளர்வதற்கு இடம் கொடுக்கும் கொடைப் பயிரே!
பூச்சிகள், நோய்கள் தாக்காத காய்ச்சல் வாலியே!
90 நாட்களில்  அறுவடை செய்யப்படும் தொன்மைப் பயிரே!
மூதாதையர்கள் காலத்து முதன்மை உணவுப் பயிரே!
அழியும் நிலையில் இருக்கும் அரிய  குதிரை வாலியே!
கடும் வறட்சியிலும் கை கொடுக்கும் கவின்மிகு பயிரே!
உழைப்பாளிகளின் உன்னத உணவு தானியமே!
மானாவாரி நிலங்களின் மறுவாழ்வு பயிரே!
நீவிர் பல்லாண்டு காலம் வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி :பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050